மகளிர் உலக கோப்பை அரை இறுதியில் இந்தியா:மகிழ்

116783-606999-india-women-pti-404

டெர்பி: ஐசிசி மகளிர் உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் அரை இறுதியில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றது.டெர்பி கவுன்டி மைதானத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து மோதின. டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச, இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 265 ரன் குவித்தது. கேப்டன் மித்தாலி ராஜ் 109 ரன் (123 பந்து, 11 பவுண்டரி), ஹர்மான்பிரீத் கவுர் 60 ரன் (90 பந்து, 7 பவுண்டரி), வேதா 70 ரன் (45 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர். அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 25.3 ஓவரில் 79 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாக, இந்தியா 186 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

5 விக்கெட் வீழ்த்திய ராஜேஸ்வரி சிறந்த வீராங்கனை விருது பெற்றார். புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த இங்கிலாந்து (12), ஆஸ்திரேலியா (12), இந்தியா (10), தென் ஆப்ரிக்கா (9) அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>