மகளிர் ஆணையத்தில் நிதி முறைகேடு விவகாரம் எப்ஐஆரில் கெஜ்ரிவால் பெயர் சேர்ப்பு

2016-22-9-12-45-29j

புதுடெல்லி : மாநில பெண்கள் ஆணையத்திற்கு ஆட்களை தேர்வு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் வழக்கில், தனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் உள்ள சதியை சிறப்பு பேரவை கூட்டத்தை கூட்டி அம்பலப்படுத்துவேன் என முதல்வர் கெஜ்ரிவால் ஆவேசமாக கூறியுள்ளார். டெல்லி மாநில பெண்கள் ஆணையத்தில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக புதிய ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், மாநில தலைவர் சுவாதி மாலிவால் தனது விருப்பத்திற்கு ஏற்ப அவரது ஆதரவாளர்களை தேர்வு செய்ததாக முன்னாள் தலைவர் பர்கா சிங் சுக்லா குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அவர் தெரிவித்த புகாரின் பேரில், கடந்த திங்களன்று 5 பேர் கொண்ட மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சுவாதி மாலிவாலிடம் நேரில் விசாரணை மேற்ெகாண்டனர். அதன்பின்னர் இந்த வழக்கில் சுவாதி மாலிவால் பெயர் உட்பட முதல்வர் கெஜ்ரிவாலின் பெயரையும் ஏசிபி அதிகாரிகள் சேர்த்தனர். அதற்கான எப்ஐஆர் நகல்களை கெஜ்ரிவாலுக்கும் அதிகாரிகள் வழங்கினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த முதல்வர் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பத்தின் பெயரிலேயே தனது பெயர் எப்ஐஆரில் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இது பற்றி கெஜ்ரிவால் நேற்று தனது அதிகாரபூர்வ இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். கெஜ்ரிவால் கூறுகையில், “ஏசிபி அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்டுள்ள எப்ஐஆரில் எனது பெயர் இடம் பெற்றுள்ளது. ஆனால், அதில் என்னுடைய பங்கு என்ன என்பது பற்றிய எந்த விளக்கமும் இல்லை. ஒரு முதல்வரின் பெயரை போகிற போக்கில் எப்ஐஆரில் சேர்த்துவிட்டு போக முடியாது. பிரதமர் மோடியின் விருப்பத்திற்கேற்ப எனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் விரைவில் டெல்லி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி இதன் பின்னணியில் உள்ள சதியை நாங்கள் அம்பலப்படுத்துவோம்” என தெரிவித்தார். இந்த விவகாரம் பற்றி துணை முதல்வர் சிசோடியா கூறுகையில், டெல்லி மாநில அரசை கலைக்கும் நோக்கத்தில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என கண்டனம் தெரிவித்தார். முன்னதாக, இந்த வழக்கில், ஊழல் தடுப்பு சட்டம் 13(டி)ன்படி, பிரிவு 409(நம்பிக்கை மோசடி), மற்றும் பிரிவு 120(பி) கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் டெல்லி மாநில பெண்கள் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏசிபி தலைவர் எம்.கே.மீனா தெரிவித்தார்.

மாலிவாலை நீக்க வேண்டும்: கவர்னரிடம் பாஜ மனு

ஆட்கள் தேர்வில் முறைகேடு வழக்கில் மாலிவால் பெயர் சேர்க்கப்பட்டதை அடுத்து அவரை தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என பாஜ கோரியுள்ளது. இது தொடர்பாக, மாநில பாஜ தலைவர் சத்தீஷ் உபாத்யாய் தலைமையில், எம்பி ரமேஷ் பிதூரி, எம்எல்ஏக்கள் ஓ,பி்சர்மா, கெஜதீஷ் பிரதான் உள்ளிட்டவர்களுடன் சென்று கவர்னர் நஜீப் ஜங்கை நேரில் சந்தித்து முறையியட்டனர். அப்போது, மாலிவாலை நீக்குவதோடு, பெண்கள் ஆணையக்குழுவை கலைக்க வேண்டும் என்பதை தெரிவித்து மனு அளித்தனர். அந்த மனுவில், ஆணையத்திற்கு ஆட்கள் தேர்வு செய்வது குறித்து எவ்வித விளம்பரமும் வெளியிடாமல் தன்னிச்சையாக தனது ஆதரவாளர்களை அதிக சம்பளத்தில் மாலிவால் பணியமர்த்தி உள்ளார் என தெரிவித்துள்ளனர்.
ஆனால், இந்த வழக்கில் தன்னை சேர்த்துள்ளபோதிலும், அது தன்னை எந்தவிதத்திலும் பாதிக்காது எனவும், எனவே, மாநில பெண்கள் ஆணையத்தில் ெதாய்வின்றி அதன் செயல்பாடுகள் நடைபெறும் எனவும் மாலிவால் தெரிவித்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>