2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜிஎஸ்டி மசோதா அமலுக்கு வரும் நம்பிக்கை – அருண்ஜெட்லி

24-1466767445-arun-jaitley-26-600

புதுடெல்லி,

வரும் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜி.எஸ்.டி மசோதா அமலுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளதாக மத்திய நிதிமந்திரி அருண்ஜெட்லி கூறியுள்ளார்.

ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1–ந்தேதி முதல் அமல்படுத்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த மசோதா கடந்த ஆண்டு மே மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டது.

டெல்லி மேல்–சபையில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போதிய பலம் இல்லாததால் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக கடந்த ஓராண்டாக இந்த மசோதா மேல்–சபையில் முடங்கிக்கிடக்கிறது. இதனால் மத்திய மந்திரிகள் அருண்ஜெட்லி, வெங்கையா நாயுடு ஆகியோர் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசையும், இதர கட்சிகளையும் சமாதானப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர்.

அப்போது ஜி.எஸ்.டி. மசோதாவில் 3 முக்கிய திருத்தங்களை செய்யும்படி காங்கிரஸ் வலியுறுத்தியது. இதில், ஒரு சதவீத கூடுதல் வரிவிதிப்பை ரத்து செய்யக்கோரிய காங்கிரசின் நிபந்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதுதவிர, ஜி.எஸ்.டி.யால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்குவது, ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய–மாநில அரசுகளுக்கு பிரச்சினை ஏற்பட்டால் ஜி.எஸ்.டி. கவுன்சில் மூலம் தீர்வு காண்பது உள்ளிட்ட 6 திருத்தங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

திருத்தம் செய்யப்பட்ட இந்த வரைவு மசோதா இன்று மதியம் (புதன்கிழமை) டெல்லி மேல்–சபையில் தாக்கல் செய்யப்படுகிறது.

ஜிஎஸ்டி மசோதா குறித்து மத்திய நிதிமந்திரி அருண்ஜெட்லி பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

வரும் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜி.எஸ்.டி மசோதா அமலுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. ஜிஎஸ்டி குறித்த அனைத்து கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் இன்னும் ஒரு சில வாரங்களில் விளக்கமான பதில் தரப்படும். ஜிஎஸ்டி பொருளாதார ரீதியாக இந்தியாவை ஒருங்கிணைப்பதாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>