போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டைக் கொடுக்காமல் இழுத்தடிக்கிறது அரசாங்கமும் நீதிமன்றமும்.

625.320.560.350.160.300.053.800.868.160.90

ஒரு வருடம் நெருங்குகிறது. ஆனாலும் சுவாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், சிறையில் மர்ம மரணம் அடைந்ததன் உண்மையை வெளிப்படுத்தும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டைக் கொடுக்காமல் இழுத்தடிக்கிறது அரசாங்கமும் நீதிமன்றமும்.
“இனிமேலும், ராம்குமாரின் பிரேத அறிக்கையை வழங்கவில்லை என்றால்… போராட்டத்தில் ஈடுபடப் போகிறேன்” ’என்ற ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ்,’
“சென்னையிலுள்ள பெருநகர முதன்மை அமர்வு நீதிமன்றம், எழும்பூரிலுள்ள பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் என மூன்று நீதிமன்றங்களிலும்… ராம்குமாரின் தாயார் புஷ்பம் பெயரில் ராம்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையைக்கேட்டு கடந்த மார்ச் 19, 20, 21 ஆகிய தேதிகளில் மூன்று வழக்குகளைத் தொடர்ந்தோம்.

அதில் “சுவாதி கொலையின் உண்மை குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக கடந்த 18-09-2016 அன்று சிறைத்துறையினர் என் மகன் ராம்குமாரை கொலை செய்துவிட்டு அவன் மின்சார ஒயரை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறிவிட்டனர். சுவாதி கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணை செய்யக்கேட்டு மனு தாக்கல் செய்ய உள்ளேன்.

போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் ராம்குமாரின் வாயில் ஒயரைக் கடித்து மின்சாரம் பாய்ந்ததற்கான ஆதாரமோ தடயமோ இல்லை. “ராம்குமாரின் இடதுபக்க மார்பில் மின்சாரம் பாய்ந்திருக்கிறது’ இச்சூழலில், போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வெளியில் வராமல் பாதுகாப்பதில் அரசு -காவல் -சிறைத்துறை என அனைத்துத் தரப்பும் கவனம் செலுத்துவது சந்தேகத்தை வலுவாக்குகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>