போலீஸ் விசாரணை ஸ்டேஷன் மாடியில் இருந்து குதித்த இளம்பெண்.

TamilNews_jakkamma

மேலூர் : மேலூரில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சிறுமி, போலீஸ் ஸ்டேஷன் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இச்சம்பவத்தில் 2 கால்களும் முறிந்தன. மதுரை மாவட்டம், மேலூர் அருகே கொட்டகுடியை சேர்ந்தவர் சுகன்யா(17, பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவரும் அதே பகுதியை சேர்ந்த சரவணனும் காதலித்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிய சுகன்யா, சரவணனின் வீட்டில் தஞ்சமடைந்தார். இதுதொடர்பாக சுகன்யாவின் தந்தை, மைனர் பெண் கடத்தப்பட்டதாக மேலூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சுகன்யாவை மீட்டு நேற்று ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தார். இன்ஸ்பெக்டர் மற்றும் 5 போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். மைனர் பெண் என்பதால் பெற்றோருடன் செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர். அதற்கு சுகன்யா மறுப்பு தெரிவித்தார்.

எனவே, அவரை காப்பகத்திற்கு அனுப்ப போலீசார் முடிவு செய்தனர். இதனால் பயந்த சுகன்யா, பாத்ரூம் செல்வதாக கூறி சென்றார். போலீஸ் ஸ்டேஷனுக்குள் உள்ள மாடிப்படி வழியாக இரண்டாவது தளத்தை அடைந்த அவர், தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் கீழே குதித்தார். இதில் அவரது 2 கால்களும் முறிந்தன. படுகாயமடைந்த சுகன்யாவை, போலீசார் உடனடியாக மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணைக்கு பயந்து, போலீஸ் ஸ்டேஷன் மாடியில் இருந்து இளம்பெண் குதித்த சம்பவம் மேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>