போக்குவரத்து தொழிலாளர் பேச்சு ஜன.3க்கு ஒத்திவைப்பு

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை ஜனவரி3ம் தேதிக்கு ஒத்திவைப்பு. பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குரோம்பேட்டையில் பேட்டி
அமைச்சர் தலைமையில் சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் 13வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் 47 தொழிற்சங்க நிர்வாகிகள், அதிகாரிகள் பங்கேற்றனர்
4 ஆண்டுக்கு ஒரு முறை 2.44 என்ற விகிதத்தில் மாற்றி அமைக்க முடிவு. 2.44 என்ற விகிதத்தில் ஊதிய உயர்வு வழங்கினால் மாதந்தோறும் ரூ.50 கோடி செலவு அதிகமாகும். 2.44 என்ற விகிதத்தில் ஊதிய உயர்வு வழங்கினால் குறைந்தபட்சமாக ரூ.1,468ம் அதிகபட்சமாக ரூ.6,938 வரை தொழிலாளிக்கு கிடைக்கும்
ஆனால் தொழிற்சங்கங்கள் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை 2.57 என்ற விகிதத்தில் ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை விடுத்துள்ளன. தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் பேசி இறுதி செய்யப்படும். ஓய்வுபெற்ற போக்குவரத்து நிர்வாகிகளுக்கான நிலுவைத்தொகை படிப்படியாக வழங்கப்படும் என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்

ஜன.3ம் தேதி நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் கோரிக்கையை ஏற்காவிட்டால் போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்று பேச்சுவார்த்தையில் பங்கேற்ற சிஐடியு செயலாளர் சவுந்தரராஜன் கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>