பொருளாதார பாதிப்பு வளைகுடாவின் நாடுகளிடம் இழப்பீடு கோரும் கத்தார்

201707101024135751_Qatar-to-seek-compensation-for-damages-from-Arab-blockade_SECVPF

வளைகுடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக கத்தார் பொருளாதார ரீதியில் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் பொருளாதார ரீதியாக தம்மை தனிமைப்படுத்தியமைக்கு எதிராக வளைகுடாவின் நான்கு நாடுகளிடம் இழப்பீடு கோரவுள்ளதாக கத்தார் அரசாங்கம் அறிவித்துள்ளது.

போராளிகளுக்கு உதவி செய்ததாக கூறி கத்தார் நாட்டிற்கு மற்ற அரேபிய நாடுகள் தடை செய்தன. அதை தொடர்ந்து சவுதி அரேபியா, ஐக்கிய அரேபிய நாடுகள், பக்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நான்கு நாடுகள் சில நிபந்தனைகள் விதித்தன. அதன் படி தோஹாவில் உள்ள இராணுவ தளத்தை மூட வேண்டும் மேலும் அல் ஜசிரா தொலைக்காட்சியை மூட வேண்டும் மற்றும் ஈரான் உடனான உறவை முறித்து கொள்ள வேண்டும் என கூறியது. ஆனால் இந்த நாடுகளினால் முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை கத்தார் முற்றாக நிராகரித்துள்ளது.

சவுதி அரேபியா, எமிரேட்ஸ், பஹ்ரேன் மற்றும் எகிப்து ஆகிய வளைகுடா நாடுகள், கத்தாருடனான விமானம் மற்றும் கடல்வழித் தொடர்பு கைவிட தீர்மானித்தது.

இதன் காரணமாக கத்தார் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

எனினும் பொருளாதார தொடர்பு காரணமாக வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட ரீதியில் குடிமக்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் ஆகியவற்றிற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்காக டோஹா அதிகாரிகளினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அரபிய நாடுகள் விமான சேவைக்கு தடை விதித்துள்ளமையால், கத்தார் தேசிய விமான சேவை மாற்று விமான நிறுவனங்கள் வழியாக பயணிக்க நேரிட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பெரிய நஷ்டம் குறித்த இழப்பீட்டில் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>