பொங்கல் பண்டிகைக்கு முன்பதிவு இன்று தொடங்கியது : பெரும்பாலான ரயில்களில் இடம் காலி

daily_news_1876751184464

சென்னை: பொங்கல் பண்டிகைக்கான ரயில்வே முன்பதிவு இன்று காலை தொடங்கியது. பொங்கலுக்கு 3 நாட்களுக்கு முன்பு செல்லும் ரயிலுக்கான முன்பதிவு என்பதால் பொதுமக்கள் போதிய ஆர்வம் காட்டாததால் பெரும்பாலான ரயில்களில் டிக்கெட் காலியாகாமல் இருந்தது.

சென்னையில் வாழும் வெளிமாவட்ட மக்கள், பண்டிகைகளை தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாட ஆர்வம் காட்டுவது வழக்கமான ஒன்று. இதுபோன்று ஊருக்கு செல்பவர்கள் பாதுகாப்பு, நேரம் குறைவு, உள்ளிட்ட வசதிகளை கருத்தில் கொண்டு பெரும்பாலும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். அதனால் பண்டிகை காலங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய பொதுமக்கள் முண்டியடித்து கொள்வார்கள். இதையடுத்து பயணிகளின் வசதிக்காக தற்ேபாது 4 மாதங்களுக்கு முன்பு முன்பதிவு துவக்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் முன்பதிவு இன்று தொடங்கியது. பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி மாதம் 13ம் தேதி தொடங்குகிறது. அதன்படி ஜன.13ம் தேதி வெள்ளிக்கிழமை போகி, 14ம் தேதி சனிக்கிழமை பெரும் பொங்கல், 15ம் தேதி ஞாயிற்றுக்
கிழமை மாட்டுப்பொங்கல், 16ம் தேதி திங்கட்கிழமை காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

சென்னையில் இருந்து போகிக்கு 2 நாட்கள் முன்பு ஜன.11ம் தேதி புதன்கிழமை புறப்படும் ரயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது. இதையொட்டி காலை முதல் பொதுமக்கள் ஆங்காங்கே உள்ள ரயில் நிலையங்களில் வரிசையில் நின்று ஆர்வமுடன் முன்பதிவு செய்தனர். தற்போது ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய இளைஞர்களிடையே அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலானோர் ஆன்லைனிலேயே டிக்கெட் முன்பதிவு செய்தனர்.

வழக்கமாக இதுபோன்று பண்டிகைகால முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்துவிடும். ஆனால் இன்று பொங்கலுக்கு 3 நாட்களுக்கு முன்பு செல்லும் ரயில் என்பதால் மக்களிடையே போதிய ஆர்வம் இல்லை. இதனால் பகல் 11 மணி நிலவரப்படி பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரயில்களில் டிக்கெட் காலியாகாமல் இருந்தது.

இருப்பினும் ஒருசில ரயில்களில் வழக்கம்போல் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டும் விற்று தீர்ந்தன. அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை வழியாக செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில கோவை எக்ஸ்பிரஸ் ரயில்களில் டிக்கெட் விற்றுவிட்டன. இதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வழியாக நெல்லை செல்லும் பல ரயில்களில் குறைந்த அளவு டிக்கெட் மட்டுமே இருந்தன.

அதன்படி கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் 60, திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ்சில் 64, நெல்லை எக்ஸ்பிரசில் 280, அனந்தபுரி எக்ஸ்பிரசில் 197, முத்துநகர் எக்ஸ்பிரசில் 340, மன்னார்குடி எக்ஸ்பிரசில் 160 டிக்கெட்கள் மட்டுமே விற்காமல் இருந்தன.

தொடர்ந்து ஜன.12ம் தேதி வியாழக்கிழமை புறப்படும் ரயிலுக்கு நாளையும், ஜன.13ம் தேதி வெள்ளிக்கிழமை போகியன்று புறப்படும் ரயிலுக்கு நாளை மறுதினமும், ஜன.14ம் தேதி சனிக்கிழமை பொங்கலன்று புறப்படும் ரயிலுக்கு ெசப்.16ம் தேதியும் முன்பதிவு செய்யலாம். இதேபோல் பொங்கல் முடிந்து ெசன்னை திரும்புவதற்கான முன்பதிவு இம்மாதம் 18ம் தேதி தொடங்குகிறது. அதாவது ஜன.16ம் தேதி திங்கட்கிழமை காணும் பொங்கல் முடிந்ததும் ரயில் ஏற விரும்புபவர்கள் செப்.18ம் தேதி முன்பதிவு செய்யலாம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>