பெரும்பான்மையை நிரூபிக்க நாகலாந்து கவர்னர் உத்தரவு: உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

201707151100150670_HC-stays-Nagaland-governors-floor-test-order_SECVPF

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் 2013–ம் ஆண்டு முதல் நாகாலாந்து மக்கள் முன்னணியின் ஆட்சி நடந்து வருகிறது. ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முதல்–மந்திரியாக இருந்த ஜெலியாங் பதவி விலகினார். இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 22–ந் தேதி புதிய முதல்வராக சுர்கோசெலி லீசீட்சு பதவியேற்றார்.

இந்தநிலையில் ஜெலியாங் தலைமையில் அக்கட்சியின் 45 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் ஒன்றாக திரண்டு லீசீட்சுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தனக்கு இருப்பதால் என்னை முதல்–மந்திரியாக நியமிக்கவேண்டும் என்று ஜெலியாங் கவர்னர் பி.பி.ஆச்சார்யாவுக்கு கோரிக்கை விடுத்தார். (மாநில சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 60 ஆகும்)

இதனால் கவர்னர் ஆச்சார்யா, சட்டசபையில் தனது பலத்தை லீசீட்சு நிரூபிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால், இதற்கு மறுத்த அவர், இடைத்தேர்தலில் தான் போட்டியிடுவதால் அதற்கு வாய்ப்பு இல்லை என்றார். இந்த நிலையில் கவர்னர் மாளிகை அலுவலகம் நேற்று முன்தினம் இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பில் லீசுட்சு வருகிற 15–ந் தேதிக்குள் (இன்று) சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தவேண்டும் என்று மீண்டும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

ஆனால், இந்த கவர்னர் உத்தரவுக்கு திங்கள் கிழமை வரை இடைக்கால தடை உத்தரவை கவுகாத்தி உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மேலும், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>