பென்சில்வேனியாவில் மீதம் வைத்த பீரைக் குடித்த கணவரை, கொலை செய்த மனைவி

பென்சில்வேனியாவில் மீதம் வைத்த பீரைக் குடித்த கணவரை, கொலை செய்த மனைவி

பென்சில்வேனியாவில் மீதம் வைத்த பீரைக் குடித்த கணவரை, கொலை செய்த மனைவி

ஹாரீஸ்பெர்க்: பென்சில்வேனியாவைச் சேர்ந்தவர் ட்ரேசி லீ கிஃபின் என்ற பெண் கடந்த ஞாயிறு இரவு தன் கணவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது போதையாகிய அவர் தனக்குப் பிடித்தமான பீரை சிறிது மீதம் வைத்து விட்டு தூங்கச் சென்று விட்டார். மறுநாள் காலை உறக்கத்திலிருந்து விழித்த அவர், தான் மீதம் வைத்திருந்த பீரை குடிப்பதற்காக தேடியுள்ளார். அப்போது அதை தன் கணவர் குடித்து தீர்த்து விட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கோபத்தில் செய்வதறியாது அருகில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து தனது கணவரின் கழுத்திலும், தலையிலும் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கணவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ட்ரேசியைக் கைது செய்தனர். அவர் மீதான வழக்கின் முதல் விசாரணை ஆகஸ்ட 31ம் தேதி நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>