பெண்கள் தாங்களாகவே கர்ப்பப்பைவாய்புற்றுநோய் சோதனை செய்துகொள்ளாம் :செபஸ்டின்

2017-16-07-12-32-57

பெண்களை பாதிக்கக்கூடிய புற்றுநோய்களில் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் முதலிடம் பிடிக்கின்றது. உலகளவில், ஆண்டுதோறும் 5 லட்சம் பெண்கள் இந்த வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில் ஆண்டுதோறும் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த வகை புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் சுமார் 4000 அமெரிக்க பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். இந்நிலையில் பெண்களுக்கு கர்ப்பப்பைவாய் புற்றுநோய் சோதனை செய்வதற்கான கையடக்க சோதனை கருவியை இந்திய அமெரிக்கர் உருவாக்கியுள்ளார்.

வடக்கு கரோலினா டியூக் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அமெரிக்க வாழ் இந்தியரான நிம்மி ராமானுஜம் மற்றும் அவரது குழுவினர் இந்த சாதனத்தை உருவாக்கியுள்ளனர். இந்த கருவியை மொபைல் அல்லது லேப்டாப்பில் இணைத்துவிட்டால் பெண்களே சோதனை செய்து கொள்ளலாம். குறைந்த விலையுடைய இந்த சாதனத்தின் மூலம் பெண்கள் வலியின்றி இந்த வகை புற்றுநோய் சோதனையை தாங்களாகவே செய்து கொள்ள முடியும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>