பெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என பச்சைகுத்திய போலீசாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

2016-09-10-22-44-03kl

திருடியதாகக் கைது செய்யப்பட்ட பெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சைகுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் 3 போலீசாருக்கு 23 ஆண்டுகளுக்குப் பின்னர் பஞ்சாப் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் திருட்டில் ஈடுபட்டதாக நான்கு பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்கள் நெற்றியில் ‘பிக் பாக்கெட்’ என்று போலீசார் பச்சை குத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 1993 டிசம்பரில் நடந்த இந்த சம்பவம் பஞ்சாப் மாநில போலீசார் மீது பரவலான விமர்சனம் எழுந்தது.

இந்த விவகாரத்தில் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறி அம்மாநில உயர்நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் கடந்த 1994-ல் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் தேசிய மனித உரிமை ஆணையமும், தங்களை ஒருதரப்பாக இணைத்துக் கொண்டது. இந்த வழக்கில் தேசிய மனித உரிமை ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று, வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பான வழக்கில் சிறப்பு சிபிஐ நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அதில், அமிர்தசரஸ் நகர காவல் கண்காணிப்பாளராக இருந்த சுக்தேவ் சிங் சின்னா, ராம்பாக் நகர போலீஸ் நிலைய முன்னாள் துணை ஆய்வாளர் நரிந்தர் சிங் மல்லி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், கூடுதல் உதவி ஆய்வாளர் கன்வால்ஜித் சிங்குக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் வழங்கி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>