பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வெளியே சென்று வந்ததற்கான புதிய வீடியோ ஆதாரம்.

sasi 500

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் மறுசீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், பெங்களூரு சிறையில் சசிகலாவும், இளவரசியும் சாதாரண உடையில் வலம் வரும் புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் சசிகலாவும், இளவரசியும் தங்களின் சொந்த உடையில், பரப்பன அக்ரஹார சிறையின் பிரதான நுழைவாயில் வழியாக சிறைக்குள் வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. கையில் பையுடன், சுடிதார் அணிந்து சசிகலா வரும் காட்சி இடம்பெற்றுள்ளது.

மேலும் பெண்கள் சிறைக்குள் ஆண் காவலர்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் பிரதான நுழைவாயிலிலேயே காவலுக்கு நிறுத்தப்படுவார்கள். இந்த வீடியோவில் சசிகலா கடந்து செல்லும் பொழுது, ஒரு ஆண் காவலர் சசிகலாவுக்கு முன்பு நடந்த செல்கிறார். மேலும் ஆண் கைதி ஒருவர் சிறை உடையில் இருப்பதும் பதிவாகி உள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>