பெங்களூரு வன்முறை: சித்தராமையா தலைமையில் காலை 11 மணிக்கு அவசர அமைச்சரவை கூட்டம்

பெங்களூரு வன்முறை: சித்தராமையா தலைமையில் காலை 11 மணிக்கு அவசர அமைச்சரவை கூட்டம்

பெங்களூரு வன்முறை: சித்தராமையா தலைமையில் காலை 11 மணிக்கு அவசர அமைச்சரவை கூட்டம்

பெங்களூரு : பெங்களூருவில் நடைபெற்று வரும் வன்முறை தொடர்பாக இன்று முதல்வர் சித்தராமையா தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் பிறப்பித்த உத்தரவை கண்டித்தும், கன்னடர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் பெங்களூருவில் வன்முறை வெடித்தது. கலவரம் தொடங்கிய உடன் கடைகளின் உரிமையாளர்கள் பாதுகாப்புக்காக அவர்களாகவே கடைகளை அடைத்தனர். மாநகர பஸ், கேஎஸ்ஆர்டிசி பஸ்கள் ஓடவில்லை. மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்பட்டது. பெங்களுருவில் மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்ட வாகனம் மற்றும் மாநிலம் முழுவதும் 250ம் மேற்பட்ட வாகனம் சேதப்படுத்தப்பட்டது.

லாரி எரிக்கப்பட்ட போது பெட்ரோல் வெடித்ததால் வெடி குண்டு வெடித்தது போல் சத்தம் கேட்டது. இதனால் மக்கள் சிதறியடித்து ஓடினர். மொத்தத்தில் பெங்களுரு மாநகரம் பதற்றத்துடன் காணப்படுகிறது. இதனையடுத்து இன்று காலை 11 மணிக்கு அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்க படுகிறது. இந்த கூட்டத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>