பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் பட்டியல் தயார்: குமாரசாமி

2017-15-07-12-04-55

பெங்களூரு சிறையில் சிறப்புச் சலுகை வழங்க சசிகலாவிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் பட்டியல் தயாராக உள்ளது என கர்நாடக‌ முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு சீர்க்கெட்டுள்ளதைப் போலவே, சிறைக்கு உள்ளேயும் நிலைமை மோசமாக உள்ளது. டிஐஜி ரூபா தெரிவித்துள்ள அனைத்து புகார் தொடர்பாகவும் நேர்மையான முறையில் விசாரணை நடைபெற வேண்டும்.

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பணக்கார கைதிகளிடம் அதிகாரிகள் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்குவது தொடர்கதையாகி வருகிறது. சசிகலாவுக்கு சிறப்பு சலுகை வழங்க அதிகாரிகள் ரூ.2 கோடி மட்டும் லஞ்சம் வாங்கவில்லை. மாறாக மாதந்தோறும் ரூ.10 லட்சம் என்ற அளவில் லஞ்சம் வாங்கியுள்ளனர். சசிகலாவைப் பார்க்க வரும் ஒவ்வொரு பிரமுகரிடமும், ஒவ்வொரு முறையும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை லஞ்சம் வாங்குகின்றனர்.

இந்த விவகாரம் ஊடகங்களில் அவ்வப்போது வெளியாகி இருக்கிறது. தற்போது ஆதாரத்தோடு புகார் கூறியுள்ள பெண் டிஐஜி ரூபா மீது துறை சார்ந்த குற்றச்சாட்டை எழுப்புவது நியாயம் அல்ல. உயர்மட்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, விசாரணை முடியும் வரை இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் நீண்ட விடுப்பில் செல்ல அரசு வலியுறுத்த வேண்டும்.

அப்போது தான் இந்த விசாரணையால் உண்மையைக் கண்டறிய முடியும். இல்லாவிட்டால் அதிகாரிகள் அனைத்து ஆதாரங்களையும் அழித்து விடுவார்கள். சசிகலா தரப்பிடம் அதிகாரிகள் லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக எனக்கு சில‌ ஆதாரங்கள் கிடைத்துள்ளது. தேவைப்பட்டால் விசாரணை அதிகாரியை நேரில் சந்தித்து ஆதாரங்களை அளிப்பேன். இல்லாவிட்டால் ஊடகங்களில் வெளியிடுவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>