பெங்களூருவில் காவிரி தண்ணீர் சுமார் 50 சதவீதம் வரை வீணடிப்பு:புள்ளி விவரங்கள் தகவல்

p8310017

பெங்களூரு: பெங்களூருவில் காவிரி தண்ணீர் சுமார் 50 சதவீதம் வரை வீணடிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 80 லட்சத்துக்கும் மேற்கொண்ட மக்கள் தொகை கொண்ட பெங்களூரு மாநகரம் குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கு காவிரி நீரை மட்டுமே நம்பியுள்ளது. வீட்டு உபயோகத்திற்காக மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு இணையாக காவிரி நீரை 50 சதவீதம் பெங்களூரு பயன்படுத்துகிறது.

ஏற்கனவே 19 டிஎம்சி தண்ணீரை பெங்களூரு பயன்படுத்தி வந்த நிலையில் 2007-ம் ஆண்டிற்கு பிறகு இந்த அலை 29 டிஎம்சி ஆக அதிகரிக்கப்பட்டது. பெங்களூருக்கு எடுத்து செல்லப்படும் நீர் குழாய்களில் இணைப்புகளில் ஓட்டை மற்றும் நீர் தேக்கங்களின் மூலம் வீணாகிறது. நகருக்கு தினசரி அனுப்பப்படும் 1400 மிலி காவிரி நீரில் 600 மிலி வீணாவதாக குடிநீர் வாரிய முன்னாள் தலைவர் கூறியுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>