பெங்களூரில் பதற்றம் தணிந்தது: இயல்பு நிலை திரும்புகிறது

bangalore_people

பெங்களூரு: காவிரி நதிநீர் விவகாரம் காரணமாக கர்நாடகாவில் கடந்த ஒரு வார காலமாக இருந்து வந்த பதற்றமான சூழ்நிலை தணிந்து, தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது.

மென்பொருள் நிறுவனங்கள் நிறைந்த நகரமாக பெங்களூருவின் பல இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, மக்களின் தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபடத் தொடங்கினர்.

பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், உணவகங்கள் இன்று காலை வழக்கம் போல மீண்டும் திறக்கப்பட்டன. கடந்த 2 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவையும் துவங்கியுள்ளது.

சாலைகளிலும் போக்குவரத்து சீரடைந்தது. எனினும், பாதுகாப்புக் காரணங்களுக்காக பதற்றமான இடங்களில் இன்னும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

முக்கிய சாலைகளில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>