புயலால் மாயமான மீனவர்களை மீட்கும் பணியில் கடற்படையுடன் இணைந்து செயல்படும் குமரி மீனவர்கள்

2017-09-12-09-24-55

தூத்தூர்: ஓகி புயலால் கன்னியாகுமரி கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் 582 பேர் மாயமாகினர். சிலர் மகாராஷ்டிரா, கேரளா, குஜராத் பகுதிகளில் கரை ஒதுங்கினர். மீனவர்களை மீட்க கோரி குழித்துறையில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் குளச்சல் பகுதியிலும் மீனவர்கள் போராட்டம் நடத்தினர். மீட்பு பணியில் கப்பற்படை, விமான படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் பகுதி மீனவர்களை கப்பல் மூலம் மீட்பு பணிக்கு அனுப்பியுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மீட்பு பணியில் ஈடுபடும்படி மீனவர்களை கேட்டு கொண்டதால் மாயமான மீனவர்களை மீட்கும் பணியில் கடற்படையுடன் இணைந்து செயல்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் குஜராத் மாநிலம் வராவில் துறைமுகத்தில் இருந்து நேற்று மீனவர்கள் தமிழகத்திற்கு புறப்பட்டனர். 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் 50 படகுகளில் புறப்பட்டனர். தமிழக அரசு அளித்த 1000 லிட்டர் டீசலுடன் தமிழக மீனவர்கள் புறப்பட்டுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>