புனர்வாழ்வுப் பெற்ற முன்னாள் விடுதலை புலிகளின் இறப்புக்கு தடுப்பூசி காரணமா?

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் தாங்கள் தடுப்பில் இருந்த போது தங்களுக்குத் தடுப்பூசி என தெரிவித்து சந்தேகத்திற்கு இடமான முறையில் ஊசி ஏற்றப்பட்டதாகத் தெரிவித்திருந்தார். முன்னர் தன்னால் 100 கிலோ எடையுடைய பொருளைத் தூக்கிக்கொண்டு ஓடிச் செல்லக்கூடியதாக இருந்தது என்றும் புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் இப்போது பத்து கிலோ எடை கொண்ட பொருளைக்கூட தூக்க முடியாதிருப்பதாகக் கூறியிருந்தார்

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் தாங்கள் தடுப்பில் இருந்த போது தங்களுக்குத் தடுப்பூசி என தெரிவித்து சந்தேகத்திற்கு இடமான முறையில் ஊசி ஏற்றப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.
முன்னர் தன்னால் 100 கிலோ எடையுடைய பொருளைத் தூக்கிக்கொண்டு ஓடிச் செல்லக்கூடியதாக இருந்தது என்றும் புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் இப்போது பத்து கிலோ எடை கொண்ட பொருளைக்கூட தூக்க முடியாதிருப்பதாகக் கூறியிருந்தார்

இலங்கை அரசாங்கத்தின் புனர்வாழ்வுப் பயிற்சிக்குப் பின்னர் சமூகத்தில் இணைக்கப்பட்டு மர்மமான முறையிலும், சந்தேகத்திற்கு இடமான முறையிலும் மரணமடைந்த முன்னாள் தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களின் விபரங்களைத் திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வடமாகாண சுகாகாரத்துறை அமைச்சர் டாக்டர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
ராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வுப் பயிற்சியளிக்கப்பட்டபோது, மெல்லப் பாதிக்கும் வகையிலான இரசாயனம் கலந்த ஊசி மருந்து முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ஏற்றப்பட்டதாகவும், அதன் காரணமாகவே பலர் சந்தேகத்திற்கு இடமான முறையில் மரணமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேசச் செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பிலான மக்கள் கருத்தறியும் நிகழ்வொன்றில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் தாங்கள் தடுப்பில் இருந்த போது தங்களுக்குத் தடுப்பூசி என தெரிவித்து சந்தேகத்திற்கு இடமான முறையில் ஊசி ஏற்றப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.
முன்னர் தன்னால் 100 கிலோ எடையுடைய பொருளைத் தூக்கிக்கொண்டு ஓடிச் செல்லக்கூடியதாக இருந்தது என்றும் புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் இப்போது பத்து கிலோ எடை கொண்ட பொருளைக்கூட தூக்க முடியாதிருப்பதாகக் கூறியிருந்தார். தடுப்பில் இருந்தபோது அந்த தடுப்பூசியின் மூலம் தங்களுக்கு ஏதோ விஷம் கலந்த மருந்து அல்லது இரசாயனம் கலந்த ஊசி மருந்து ஏற்றப்பட்டதாக அவர் முறையிட்டு, தங்களை முறையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரியிருந்தார்.
இதனையடுத்து. இந்த ஊசி விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் அரங்கில் பலதரப்பினராலும் எழுப்பப்பட்டிருந்தது. முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் முறையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கோரி வடமாகாண சபையில் பிரேரணையொன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன் பின்னணியில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக வட மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசாங்கமும் தேவையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையிலேயே சந்தேகத்திற்கு இடமான முறையிலும், புற்றுநோய்க்கு ஆளாகியும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களின் விபரங்களைத் திரட்டுவதற்கு வடமாகாண சபை நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இவர்களில் விடுதலைப்புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினி என்றழைக்கப்பட்ட சுப்பிரமணியம் சிவகாமி புற்றுநோய்க்கு உள்ளாகி மகரகம புற்றுநோய் வைத்தியசாலையில் உயிரிழந்தமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>