புதுப்பட ரிலீஸ் இல்லை – விஷால்

கேளிக்கை வரி தொடர்பாக முடிவு கிடைக்கும் வரை புதிய திரைப்படங்கள் வெளியிடப்படாது என தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.

கேளிக்கை வரியை ரத்து செய்வது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் எஸ்.பி.வேலுமனி தலைமையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்,திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் கலந்துகொண்ட அலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது201707280044047372_Interview-with-actor-Vishal_SECVPF

சுமார் 12 மணி அளவில் தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டத்தில்  தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடிகர் விஷால், விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் அபிராமி ராமனாதன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால் நல்ல முடிவு விரைவில் வெளியாகும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
டிக்கெட் கட்டன விலை உயர்வால் திரைப்பட துறை கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிவித்த அவர் உடன்பாடு எட்டப்படும் வரையில் புதிய திரைப்படங்கள் வெளியாகாது என்று தெரிவித்தார்.
மேலும் இன்றைய பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக தெரிவித்த அவர் நாளையும் பேச்சுவார்த்தை தொடரும் என்று தெரிவித்தார்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>