புதிய கல்விக்கொள்கைய எதிர்த்து சென்னையில் செபடம்பர் 29ஆம் தேதி ஆர்ப்பாட்டம் :புதிய கல்விக் கொள்கை எதிர்ப்புப் போராட்டக் குழு அறிவிப்பு

புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து செபடம்பர் 29ஆம் தேதி சென்னையில் அனைத்து அரசியல் கட்சி மற்றும் அமைப்புகள் கூடி ஆர்ப்பாட்டம் மற்றும் பாராளுமன்றம் கூடும் முதல் வாரத்தில் டெல்லியில் கருத்தரங்கம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறுக் என புதிய கல்விக் கொள்கை எதிர்ப்புப் போராட்டக் குழு அறிவிப்பு

புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து செபடம்பர் 29ஆம் தேதி சென்னையில் அனைத்து அரசியல் கட்சி மற்றும் அமைப்புகள் கூடி ஆர்ப்பாட்டம் மற்றும் பாராளுமன்றம் கூடும் முதல் வாரத்தில் டெல்லியில் கருத்தரங்கம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறுக் என புதிய கல்விக் கொள்கை எதிர்ப்புப் போராட்டக் குழு அறிவிப்பு

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து செபடம்பர் 29ஆம் தேதி சென்னையில் அனைத்து அரசியல் கட்சி மற்றும் அமைப்புகள் கூடி ஆர்ப்பாட்டம் மற்றும் பாராளுமன்றம் கூடும் முதல் வாரத்தில் டெல்லியில் கருத்தரங்கம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறுக் என புதிய கல்விக் கொள்கை எதிர்ப்புப் போராட்டக் குழு அறிவிப்பு

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை வரைவு சில முன்மொழிவுகள் 2016 என்ற அறிக்கையில் உள்ள பல்வேறு உள்ளீடுகளை திரும்பப் பெறக்கோரி தமிழகம் முழுக்க பல்வேறு அமைப்புகள் கடந்த ஒரு மாத காலமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் திமுக,இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக மற்றும் தமிழ் அமைப்புகளான திராவிடர் விடுதலைக் கழகம்,சமத்துவக் கல்விக்கான கூட்டமைப்பு, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை உள்ளிட்ட 24 அமைப்புகள் இணைந்து உருவாக்கப்பட்ட புதிய கல்விக்கொள்கை எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் இன்று சேப்பாக்கத்தில் உள்ள சென்னை நிருபர்கள் சங்க கட்டிடத்தில் கூடி கலந்தாலோசித்தனர்.
இந்தக் கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ துரைமுருகன் , சுப.வீரபாண்டியன், தியாகு, உட்பட பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தின் இறுதியில் வருகிற 29ஆம் தேதி புதிய கல்விக்கொள்கைய எதிர்த்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்றும் பாராளுமன்றம் கூடும் முதல் வாரத்தில் டெல்லியில் ஆர்ப்பாட்டம் மற்றும் கருத்தரங்கம் நடத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பைச் சேர்ந்த பிரின்ஸ்.கஜேந்திரபாபு மத்திய அரசு கொண்டுவரவிருக்கும் கல்விக்கொள்கையானது சமூக நீதியை, மாநில மொழியை அழித்துவிடும் எனவும், விளிம்புநிலை மக்களின் கல்வி உதவித்தொகையை தடுத்து விடும் எனவும் இந்த கல்விக் கொள்கையைய எதிர்க்க கேரளா,கர்நாடகம், தெலுங்கானா,ஆந்திரா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்கள் ஆகியோரிடமும் ஆதரவு கேட்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>