பீஹார் மாநிலத்தைச் சேர்த்த பெண் தன்னுடைய தாலியை அடகு வைத்தது கழிப்பறை கட்டியுள்ளார்.

 

பீஹார் மாநிலத்தைச் சேர்த்த பெண்  தன்னுடைய தாலியை அடகு வைத்தது  கழிப்பறை கட்டியுள்ளார்

பீஹார் மாநிலத்தைச் சேர்த்த பெண் தன்னுடைய தாலியை அடகு வைத்தது கழிப்பறை கட்டியுள்ளார்

 

பீஹார் மாநிலத்தைச் சேர்த்த பெண் ஒருவர் தன்னுடைய தாலியை அடகு வைத்தது தன் வீட்டில் கழிப்பறை கட்டியுள்ளார்.

பீஹார் மாநிலத்தின் சசரம் பகுதியில் உள்ள பரக்கனா கிராமத்தைச் சேர்ந்தவர் பஹுல் குமாரி. அங்குள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் சமையல் சேலை செய்து வருகிறார். இவரது கணவர் விவசாயக் கூலித் தொழிலாளி. குமாரி தனனுடைய வீட்டில் தனக்காக ஒரு கழிப்பறை கட்ட வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவருடைய வருமானம் அதற்கு போதவில்லை. கணவருக்கும் மிகக் குறைந்த வருமானம்தான்.

இருந்த போதிலும் தன் வீட்டில் தனக்கு ஒரு கழிப்பறை கட்டியே ஆக வேண்டும் என்று உறுதி பூண்டவர் அதற்காக தன்னுடைய தாலியை அடகு வைக்கும் முடிவை எடுத்தார். இதற்கு அவருடைய குடுமபத்தில் உள்ள இதர ஆண் உறுப்பினர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இருந்த போதிலும் அதனை சமாளித்து தாலியை அடகு வைத்து பணம் திரட்டினார். இந்த சம்பவம் பற்றிக் கேள்விப்பட்ட உடன் ரோஹ்தஸ் மாவட்ட நீதிபதி அனிமேஷ் குமார் பராஷர், குமாரியை அழைத்துப் பாராட்டினார்.

இது பற்றி அவர் கூறும் பொழுது , புதன்கிழமை அன்று நானும் மாவட்டத்தின் மற்ற முக்கிய அதிகாரிகளும் இணைந்து குமாரி வீட்டில் கழிப்பறை கட்டும் பணியைத் துவக்கி வைக்க உள்ளோம்.

திட்டமிட்டபடி பத்து நாட்களுக்குள் கழிப்பறை கட்டி முடிக்கபப்டும் என்று தெரிவித்த அவர் குமாரியின் இந்த செய்கையை பாராட்டி அவர் மாவட்ட முழு சுகாதாரத் திட்டடத்தின் விளம்பரத் தூதுவராக நியமிக்கப்பட உள்ளார் என்று கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>