பில்லா-3 அல்லது கெட்டவன் 2.0 என்ற பெயரில் புதிய படம் சிம்புவின் ரகசிய திட்டம் : கதிர்

201707271332104568_Is-Simbus-hushhush-project-Billa-3-or-Kettavan-20_SECVPF

பில்லா- 3 என்ற பெயரில் ஒரு படத்தில் நடிகர் சிம்பு தயாரித்து ,இயக்கி, நடிக்க திட்டமிட்டு உள்ளார். ஆனால், இது ரஜினி ,அஜித்தின் பில்லா மறுதொடக்க தொடர்ச்சியாக இருக்காது என்று சொல்லப்படுகிறது. சிம்புவின் கெட்டவன் படத்தை பில்லா- 3 ஆக மாற்ற திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் சிம்பு கொடுரமான பாத்திரத்தில் நடிக்கபோவதாக கூறப்படுகிறது.

இதில் இரண்டு கதாபாத்திரங்களை உள்ளது, அதில் ஒன்று சிம்பு நடிக்கிறார். மற்றொரு முன்னணி பெண் கதாபாத்திரம் ஆகும். இந்த கேரக்டருக்கு ஸ்டைலான நடிகையை தேடிவருவதாக கூறப்படுகிறது. ஆரம்பம் படத்தில் நடித்த அக்‌ஷரா கவுடா நடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் சில ரிகர்சல் காட்சிகள் சமீபத்தில் சென்னையில் எடுக்கபட்டு உள்ளது. விரைவில் டீஸர் டிரெய்லராக வெளியிடப்பட வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

குறிப்பாக அவரது அண்மையில் வெளியான அனபானவன் அசாராதவன் அடங்காதவன் தோல்விக்குப் பின்னர் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என கூறப்படுகிறது.

நடிகர் சிம்பு இந்த படத்தின் படப்பிடிப்பை அமெரிக்காவில் நடத்த திட்டமிட்டுள்ளார், மேலும் அடுத்த மாதத்தில் படத்திற்கான இடங்களைக் கண்டுபிடிப்பதற்காக அங்கு அவர் செல்கிறார்.

ஆனால் இது தொடர்பாக தகவல் தெரிவிக்க சிம்புவின் நெருங்கைய வட்டாரங்கள் மறுப்பு தெரிவித்து உள்ளனர். இவை வதந்திகளாகும் என்று கூறினர். ஆனால் நடிகர் உண்மையில் ஒரு படத்தில் பணிபுரிகிறார் என்று ஒப்புக் கொண்டது. மேலும் ரிகர்சல் படப்பிடிப்பு நடந்தது உண்மை என்றனர்.

ஆனால் அவர் இந்த திட்டத்தின் விவரங்களை ரகசியமாக வைத்திருப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து நடிகர் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில், அடுத்த படம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவதை நிறுத்துங்கள். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரையில் தயவு செய்து பொறுமை கொள்ளுங்கள். உங்கள் ஆதரவுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>