பிற்படுத்தப்பட்டோர் புதிய ஆணையத்துக்குநீதிமன்ற அதிகாரம் : மத்திய அரசு

இந்த மசோதா நிறைவேறியவுடன் பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையம் தனக்கு வரும் புகார்களை விசாரிக்கும். தேவைப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர்களை சம்மன் அனுப்பி வரவழைக்கவும், விசாரித்து தண்டனை வழங்கவும் முடியும்.

இந்த மசோதா நிறைவேறியவுடன் பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையம் தனக்கு வரும் புகார்களை விசாரிக்கும். தேவைப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர்களை சம்மன் அனுப்பி வரவழைக்கவும், விசாரித்து தண்டனை வழங்கவும் முடியும்.

புதுடெல்லி: பிற்படுத்தப்பட்டோருக்காக உருவாக்கப்படும் புதிய ஆணையத்துக்கு, சிவில் நீதிமன்றம்போல் அதிகாரம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையத்துக்கு, அரசியல் சாசன அந்தஸ்து வழங்கி அதிகாரமிக்கதாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் இருந்தது. அதை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தது. அதனால் பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தை(என்சிபிசி) சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய கமிஷன்(என்சிஎஸ்இபிசி) என மாற்ற மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி அளித்தது. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த மசோதா நிறைவேறியவுடன் பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையம் தனக்கு வரும் புகார்களை விசாரிக்கும். தேவைப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர்களை சம்மன் அனுப்பி வரவழைக்கவும், விசாரித்து தண்டனை வழங்கவும் முடியும்.

இது சிவில் நீதிமன்றத்துக்கு உள்ள அதிகாரத்துக்கு நிகரானது. இந்த அமைப்பால் ஓபிசி பட்டியலில் புதிய பிரிவினரை சேர்க்க முடியும். ஆனால் நீக்க முடியாது. புதிய ஆணையத்தில் ஒரு தலைவர், ஒரு துணைத் தலைவர் மற்றும் 3 உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். ஜாட் இனத்தவர் தங்களை ஓபிசி பட்டியலில் சேர்க்கக் கோரி கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆணையம் உருவாக்கப்பட்டவுடன் ஜாட் இனத்தவர் ஓபிசி பட்டியலில் சேர்க்கப்படுவர் எனத் தெரிகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>