பிரிட்ஜ் இருந்தால் ரேஷன் பொருட்கள் இல்லை

486480_241555652631570_1406714044_n

பொது விநியோகத்திட்ட பயனாளிகளை அடையாளம் காண விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.

* வருமான வரி செலுத்தக்கூடிய ஒரு நபரைக்கொண்ட குடும்பத்திற்கும், தொழில் வரி செலுத்துபவரை உறுப்பினராகக் கொண்ட குடும்பத்திற்கும் ரேஷன் பொருட்கள் இல்லை.

* மத்திய, மாநில அரசு ஊழியர்களூக்கும் ரேஷன் பொருட்கள் இல்லை.

* குளிர்சாதனப்பெட்டி வைத்திருக்கும் குடும்பத்தினருக்கும் ரேஷன் பொருட்கள் இல்லை.

* ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ரேஷன் பொருட்கள் இல்லை.

* 3 அறைகளுக்கு மேல் வீடுகளை வைத்திருப்போருக்கு ரேஷன் பொருட்கள் இல்லை.

* நான்கு சக்கர மோட்டார் வாகனம் வைத்துள்ளவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை.

* 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை.

* ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கும் மேல் இருந்தால் ரேஷன் பொருட்கள் இல்லை.

* நகர்புறம் – அந்தியோதயா அன்னயோஜனா குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் உண்டு.

* வணிக நிறுவனங்களை பதிவு செய்து செயல்படும் குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை.

* விதவை, திருமணம் ஆகாத பெண்களை குடும்பத்தலைவராக கொண்ட குடும்பத்தினருக்கு பொருட்கள் உண்டு.

* நகர்புறம் – வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களூக்கு ரேஷன் பொருட்கள் உண்டு.

* நகர்புறம் – முதியோர் உதவித்தொகை திட்ட பயனாளிகள் போன்ற பயனாளிகளுக்கு பொருட்கள் உண்டு.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>