பிரான்ஸின் நைஸ் நகரில் தீவிரவாத தாக்குதல்

பாரீஸ்: நீஸ் நகரத்தில் கனரக வாகன தாக்குதல் நடத்தப்பட்டதன் எதிரொலியாக,பிரான்ஸில் மேலும் 3 மாதங்களுக்கு அவசர நிலை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை பிரான்ஸ்  அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே வெளியிட்டுள்ளார். பிரான்ஸின் நைஸ் நகரில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 130 பேராக அதிகரித்துள்ளது

பாரீஸ்: நீஸ் நகரத்தில் கனரக வாகன தாக்குதல் நடத்தப்பட்டதன் எதிரொலியாக,பிரான்ஸில் மேலும் 3 மாதங்களுக்கு அவசர நிலை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே வெளியிட்டுள்ளார்.
பிரான்ஸின் நைஸ் நகரில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 130 பேராக அதிகரித்துள்ளது

பிரான்ஸில் மக்கள் கூட்டத்துக்குள் லாரியை அதிவேகமாகச் செலுத்தி 80 பேர் படுகொலை:

பிரான்ஸ் நாட்டில் நைஸ் நகரில் வியாழக்கிழமை இரவு பொதுநிகழ்ச்சி ஒன்றில் மக்கள் திரளாகக் கூடியிருந்த இடத்தில் மர்ம நபர் ஒருவர் லாரியை அதிவேகமாக செலுத்தியதில் 80 பேர் உடல் நசுங்கி இறந்தனர். பலர் காயமடைந்தனர்.

கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். ஆனால் அந்த நபர் யார் என்ற அடையாளம் இதுவரை தெரியவில்லை.

சம்பவம் குறித்து அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் கூறும்போது, “பேஸ்டைஸ் தினத்தையொட்டி வானவேடிக்கை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அதைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அப்போது கனரக லாரி ஒன்று தாறுமாறாக மக்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இருப்பினும் லாரி ஓட்டுநர் வேகமாக செலுத்த எதிரே சிக்கியவர்கள் அனைவரும் பலியாகினர்” என்றார்.

8 மாதங்களில் 2-வது தாக்குதல்:

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 8 மாதங்களுக்கு முன்னதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தற்போது நடத்தப்பட்ட தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் தற்போதைய தாக்குதலில் ஒரே ஒரு நபர் மட்டுமே ஈடுபட்டதாகத் தெரிகிறது.

நைஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எரிக் சியோட்டி பிரான்ஸ் வானொலிக்கு அளித்தப் பேட்டியில், “அது ஒரு படுபயங்கரமான சம்பவம். 80 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். பேஸ்டைல் தினத்தை ஒட்டி நடத்தப்பட்ட வான வேடிக்கை நிகழ்ச்சியைக் காணத் திரண்டிருந்த மக்கள் கூட்டத்துக்குள் அந்த மர்ம நபர் லாரியை அதிவேகமாக செலுத்தி தாக்குதலை ஏற்படுத்தியிருக்கிறார்” என்றார்.

துனிசியா நாட்டைச் சேர்ந்தவரா?

தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீஸார் சுட்டு வீழ்த்தினர். அவரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், நைஸ் – மேடின் செய்தித்தாளில் தாக்குதலில் ஈடுபட்ட நபர் துனிசியா நாட்டைச் சேர்ந்த 31 வயது இளைஞர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் காயமடைந்தவர்களில் 42 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அந்த செய்தித் தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லாரியில் ஆயுதங்கள்; வெடிகுண்டுகள்:

சம்பவ இடத்துக்கு விரைந்த தீவிரவாத தடுப்புப் படையினர் அந்த கனரக லாரியில் சோதனை மேற்கொண்டனர். அந்த வாகனத்தில் பயங்கர ஆயுதங்களும், கையெறி குண்டுகளும் இருந்ததாகத் தெரிவித்துள்ளனர். போலீஸார் அந்த மர்ம நபரை சுட்டு வீழ்த்தும் முன் அவரும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

ஒபாமா கண்டனம்:

பிரான்ஸ் சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “தீவிரவாத தாக்குதல் போல் இருக்கும் இச்சம்பவத்தை ஒட்டுமொத்த அமெரிக்கர்கள் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி கண்டனம்:

பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “பிரான்ஸ் மக்களின் துயரத்தை பகிர்ந்து கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாரீஸ்: நீஸ் நகரத்தில் கனரக வாகன தாக்குதல் நடத்தப்பட்டதன் எதிரொலியாக,பிரான்ஸில் மேலும் 3 மாதங்களுக்கு அவசர நிலை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே வெளியிட்டுள்ளார்.

பிரான்ஸின் நைஸ் நகரில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 130 பேராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>