பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் பலத்த பாதுகாப்பு

Tamil_News_large_1820904_318_219

ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில், அப்துல் கலாம் தேசிய நினைவகத்தை, பிரதமர் மோடி இன்றுதிறந்து வைக்கிறார். பிரதமரின் வருகையையொட்டி ஒட்டுமொத்தமாக ராமேசுவரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாமுக்கு, டி.ஆர்.டி.ஓ., எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், பேக்கரும்பில், 16.5 கோடி ரூபாயில், நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மண்டபத்தை, அப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார். காலை 10.30 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வந்திறங்கும் மோடி, பின்னர் அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம் பேய்க்கரும்பு சென்றடைகிறார்.

11 மணியளவில் நினைவு மண்டபத்தை திறந்து வைக்கும் மோடி, பின்னர் 12 மணியளவில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார். அப்துல் கலாமின் சாதனைகள் குறித்த பிரச்சார வாகன பயணத்தையும் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், குடியரசுத் துணைத்தலைவர் வேட்பாளர் வெங்கையாநாயுடு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

பிரதமர் மோடியின் ராமேஸ்வரம் வருகையையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. விழா நடைபெறும் பகுதியிலும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 4 ஐ.ஜி.,க்கள் தலைமையில், ஐந்தாயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதல் மூன்று அடுக்குகளில், தமிழக போலீசாரும், உள்பகுதி இரண்டு அடுக்கில், துணை ராணுவத்தினர் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர்.

கடற்கரை பகுதி என்பதால் இந்திய கடலோர காவல்படையும், தமிழக கடலோரா காவல்படையும் கடல்வழி பாதுகாப்பை மேற்கொண்டுள்ளன. அபிக், செட்லட் என்ற பீரங்கிகள் தாங்கிய 2 அதிநவீன கப்பல்கள், 4 சிறிய ரக மரைன் கப்பல்கள் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>