பிரதமர் மோடி தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டார்.

2016-06-10-22-32-34kjk

திருச்சி: திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்டா மாவட்ட சங்க தலைவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்தார். கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டார்.

இதைக் கண்டித்து 17ம் தேதி டெல்லியில் பிரதமர் வீட்டு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்வது. முன்னாள் பிரதமர் தேவகவுடா அரசியல் சட்டஅமைப்பின்படி பதவிபிரமாணம் செய்தார். ஆனால் கர்நாடகாவிற்கு ஆதரவாக இருந்து இறையாண்மைக்கு எதிராகவும் செயல்படுகிறார்.

இதனை கண்டித்து அவர் எப்போது தமிழகம் மற்றும் ஸ்ரீரங்கம் கோயிலுக்கோ வந்தால் அவருக்கு கருப்பு கொடி காட்டுவது. கர்நாடக அரசியல் தலைவர்கள் யார் தமிழகத்திற்கு வந்தாலும் அவர்களுக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவது. வயலில் தண்ணீர் இல்லாததால் சும்மா இருக்கும் ஏர் கலப்பையை சாலையில் உழும் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>