பிரணாப் முகர்ஜியின் மகளுக்கு முகநூலில் ஆபாச செய்திகளை அனுப்பி நபர் ?

யாரென்று எனக்குத் தெரியாத நபர் ஒருவர், நேற்றிரவு எனக்கு முகநூலில் பாலியல் ரீதியில் செய்திகளை அனுப்பினார். முதலில் அதை நிராகரிப்பது என்றும், அந்த நபரின் முகநூல் பக்கத்தை முடக்குவது எனவும் நினைத்தேன். ஆனால், நான் எனது எதிர்ப்பை தெரிவிக்கவில்லையெனில், அந்த நபர் இதுபோல மற்றவர்களிடமும் நடந்து கொள்வார் என்று நினைத்தேன்

யாரென்று எனக்குத் தெரியாத நபர் ஒருவர், நேற்றிரவு எனக்கு முகநூலில் பாலியல் ரீதியில் செய்திகளை அனுப்பினார். முதலில் அதை நிராகரிப்பது என்றும், அந்த நபரின் முகநூல் பக்கத்தை முடக்குவது எனவும் நினைத்தேன். ஆனால், நான் எனது எதிர்ப்பை தெரிவிக்கவில்லையெனில், அந்த நபர் இதுபோல மற்றவர்களிடமும் நடந்து கொள்வார் என்று நினைத்தேன்

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகளும், தில்லி மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான சர்மிஷ்டா முகர்ஜிக்கு, முகநூலில் மர்ம நபர் ஒருவர் ஆபாசமான தகவல்களை அளித்து தொந்தரவு செய்துள்ளார்.

இதுகுறித்து முகநூலில் சர்மிஷ்டா முகர்ஜி சனிக்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறப்பட்டிருப்பதாவது:

யாரென்று எனக்குத் தெரியாத நபர் ஒருவர், நேற்றிரவு எனக்கு முகநூலில் பாலியல் ரீதியில் செய்திகளை அனுப்பினார். முதலில் அதை நிராகரிப்பது என்றும், அந்த நபரின் முகநூல் பக்கத்தை முடக்குவது எனவும் நினைத்தேன். ஆனால், நான் எனது எதிர்ப்பை தெரிவிக்கவில்லையெனில், அந்த நபர் இதுபோல மற்றவர்களிடமும் நடந்து கொள்வார் என்று நினைத்தேன்.

இதேபோன்ற நபர்களின் செயல்பாடுகள் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும், அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று கருதினேன். எனவே அந்த நபரின் முகநூல் பக்கத்தை புகைப்படங்கள் எடுத்து எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன். அந்த நபர் எனக்கு அனுப்பிய தகவல்களையும் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அந்த நபரின் முகநூல் பக்கத்தையும் எனது பக்கத்தில் பகிர்ந்துள்ளேன். இந்த பதிவையும், இந்த நபரின் முகநூல் பக்கத்தையும் பிறருடன் பகிர்ந்து கொள்ளும்படி இதை படிப்போரைக் கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற செயல்பாடுகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

இதுபோன்று ஏராளமான வழக்குகளை போலீஸôர் விசாரித்துக் கொண்டிருப்பார்கள். இந்த விவகாரத்தில் சாதாரணமான பிற பெண்களைப் போலவே போராட விரும்புகிறேன். குடியரசுத் தலைவரின் மகள் என்ற காரணத்துக்காக இதில் போலீஸôர் சிறப்பு கவனம் செலுத்துவதை விரும்பவில்லை.

அந்த நபரின் பெயர், பார்த்தா மண்டல் என்று முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நபர் குறித்து தில்லி காவல்துறையில் புகார் அளிப்பதென்று முடிவு செய்துள்ளேன்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>