பா.ஜ.க சார்பில் கேரளாவில் இன்று முழு அடைப்பு : தமிழகத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவிலை

images

குமரி : கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ராஜேஷ் வெட்டி கொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று கேரளா முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ், 34 , ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான இவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு நேற்று இரவு 9 மணி அளவில் வீடு திரும்பி கொண்டிருந்தார். திருவனந்தபுரம் அருகே ஸ்ரீகார்யம் என்ற பகுதியில் வந்த போது அவரை வழி மறித்த 15 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியது.

இதில் அவரது கைகள் துண்டாகின. பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேஷ் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன் காரணமாக தமிழகம் கேரள எல்லைப் பகுதியில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து நாகை மற்றும் திருவனந்தபுரத்திற்கு செல்லும் அரசு பேருந்து இயக்கப்படவில்லை. மேலும் நேற்று இரவு வந்த கேரள அரசு பேருந்துகல் திருவனந்தபுரத்திற்கு செல்லாமல் நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளை வரை மட்டுமே செல்கின்றன. இதனால் திருவனந்தபுரம் செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>