பா.ஜனதா தலைவர் மகன் பெண்ணை கடத்த முயன்ற வழக்கு விசுவரூபம்

201708080947532201_Will-move-court-if-charges-diluted-Father-of-woman-allegedly_SECVPF

புதுடெல்லி,

அரியானா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் மகளை கடந்த வெள்ளிக்கிழமை இரவு சண்டிகாரில் 2 பேர் பின்தொடர்ந்து தொல்லை செய்து, கடத்த முயற்சித்துள்ளனர்.

இதில் புகாருக்கு ஆளாகி இருப்பவர்கள், அரியானா மாநில பா.ஜனதா தலைவர் சுபாஷ் பராலாவின் மகன் விகாஸ், அவரது நண்பர் ஆசிஷ். இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

ஆனால் இந்த விவகாரம் விசுவரூபம் எடுத்து வருகிறது.

இந்த விவகாரத்தை இப்போது தேசிய மகளிர் ஆணையம் கையில் எடுத்துள்ளது. சம்பவம் பற்றி சுதந்திரமான, நேர்மையான விசாரணையை விரைவாக நடத்தி, அது குறித்த தகவலை ஒவ்வொரு கட்டத்திலும் தெரிவிக்குமாறு அரியானா போலீசுக்கு தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி லலிதா குமாரமங்கலம் உத்தரவிட்டுள்ளார்.

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி, விகாஸ், ஆசிஷ் மீது நடவடிக்கை கோரி, அந்த மாநில ஐகோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையான ஐ.ஏ.எஸ். அதிகாரி தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘‘இந்த வழக்கின் விசாரணையில் தலையிட மாட்டோம். அதே நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர், தனது செல்வாக்கை காட்ட நாங்கள் விரும்பவில்லை. தேவைப்படும்போது, விசாரணைக்கு உதவுவோம். இந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நீர்த்துப்போக விட்டாலோ, போதுமான வகையில் குற்றம் சாட்டாவிட்டாலோ நாங்கள் கோர்ட்டை நாடுவோம்’’ என எச்சரித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் தன்னை கடத்துவதற்கு முயற்சி செய்தனர் என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. ஆனால் சண்டிகார் போலீஸ் கடத்தல் முயற்சி குற்றச்சாட்டில் வழக்கை பதிவு செய்யவில்லை. இதற்கிடையே இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் மாயமாகியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இவ்வழக்கில் வெள்ளிக்கிழமை உடனடியாக ஜாமீன் வழங்க்ப்பட்டு உள்ளது. ஆனால் கடத்தல் முயற்சி வழக்கின்படி அவர்களுக்கு உடனடியாக ஜாமீன் வழங்க முடியாது. இவ்விவகாரம் எந்த பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்வது என சட்ட வல்லுநர்களிடம் ஆலோசித்து வருகிறோம், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என போலீஸ் தெரிவித்து உள்ளது.

ஆனால் ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாரதீய ஜனதா குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்ற முயற்சி செய்து வருகிறது என குற்றம் சாட்டிவருகிறது. போலீஸ் விசாரணை சரியான கோணத்தில் செல்லவில்லை எனவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>