பாவலா காட்டுகிறார் கமல்… ஜனவரிக்குள் அரசியலுக்கு வரட்டும்: ஜெயக்குமார் பேட்டி

1500295596

அரசியலுக்கு வருவதுபோல் பாவலா காட்டுகிறார் நடிகர் கமல் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,

அரசியல் என்பது முள்படுக்கை. அரசியலை சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. அதில் எவ்வளவு கஷ்டம் இருக்கிறது என்பதை வந்து தெரிந்துகொள்ளட்டும். வரேன், வரேன் என்று சொல்லிக்கொண்டு சும்மா பாவலா காண்பிக்கக்கூடாது. வரணும் அரசியலுக்கு. வந்து தமிழ்நாட்டு மக்களுக்கு செய்யுங்கள்.

ரசிகர் மன்றம் மூலமாக எதாவது ஒரு நன்மை, சுனாமி வந்தது கமல் செஞ்சிருப்பாரா. பெருவெள்ளம் வந்தது. செஞ்சிருப்பாரா. ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடாமல், சும்மா வாய்ஜாலம் காட்டுவது என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர்வார்கள். அவர் அரசியலுக்கு வரட்டும். கிட்டதட்ட ஜனவரிக்குள் அரசியலுக்கு வந்தால் நல்லதுதான். சும்மா பாவலா காட்ர வேலையல்லாம் வைத்துக்கொள்ள வேண்டாம். இவ்வாறு கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>