பாலில் கலப்படம் செய்தால் ஆயுள் தண்டனை : சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் உச்சநீதிமன்றம்

சந்தையில் விற்பனை செய்யப்படும் 68 சதவீத பாலில் கலப்படம் உள்ள

சந்தையில் விற்பனை செய்யப்படும் 68 சதவீத பாலில் கலப்படம் உள்ளது

புதுடெல்லி: பாலில் கலப்படம் செய்தால் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ள பரிசீலிக்குமாறு மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. அதிகரித்துவிட்ட பால் கலப்படத்தை தடுக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனு தலைமை நீதிபதி தாகூர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. சந்தையில் விற்பனை செய்யப்படும் 68 சதவீத பாலில் கலப்படம் உள்ளதென்ற ஆய்வறிக்கையை அவர்கள் சுட்டிக் காட்டினர்.

குறிப்பாக பிகார், சத்தீஸ்கர், மேற்குவங்கம், மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் 100 சதவீதம் அளவுக்கு பால் கலப்படம் உள்ளதையும் நீதிபதிகள் மேற்கொள் காட்டினர். உயிருக்கும், உடல் நலத்திற்கும், அச்சுறுத்தலாக உள்ள பால் கலப்படம் தீவிரமாக கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் இதனை தடுக்க மென்மையான சட்டங்கள் போதாது என்றனர்.

பால் கலப்படத்தை தடுக்க கடுமையான விதிகளை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என்று கூறிய, ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டதிருத்தம் மேற்கொள்வது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றனர்.

மேலும் கலப்படத்தை கண்டறிவது குறித்து மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த விவகாரத்தில் ஊழலை தடுக்கவும், மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை தேவை என அவர்கள் அறிவுறுத்தினர். பால் கலப்படத்திற்கு 6 மாதம் சிறை, அல்லது அபராதம் விதிக்கும் விதிகளை தற்போது நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>