பாலியல் தொல்லை வழக்கில் சசிகலா புஷ்பாவை 6 வாரத்திற்கு கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை

புதுடெல்லி: சசிகலா புஷ்பாவை 6 வாரத்திற்கு கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.  நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்த ஆணைக்குடியை சேர்ந்த இளம்பெண் பானுமதியும், அவரது சகோதரி ஜான்சிராணியும், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தனர்.

புதுடெல்லி: சசிகலா புஷ்பாவை 6 வாரத்திற்கு கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்த ஆணைக்குடியை சேர்ந்த இளம்பெண் பானுமதியும், அவரது சகோதரி ஜான்சிராணியும், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தனர்.

புதுடெல்லி: சசிகலா புஷ்பாவை 6 வாரத்திற்கு கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்த ஆணைக்குடியை சேர்ந்த இளம்பெண் பானுமதியும், அவரது சகோதரி ஜான்சிராணியும், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தனர். அதில் தாங்கள் சசிகலா புஷ்பா வீட்டில் வேலை பார்த்து வந்தபோது அவரது கணவர் லிங்கேஸ்வரர், மகன் பிரதீப் ஆகியோர் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிவித்திருந்தனர்.

மேலும் சசிகலா புஷ்பாவும், அவரது தாயார் கௌரியும் தகாத வார்த்தைகளால் பேசி, அடித்து துன்புறுத்தியதாகவும் மனுவில் தெரிவித்திருந்தனர். இதன் அடிப்படையில் விசாரணை செய்த ஆய்வாளர், சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர், மகன் உள்ளிட்டோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மனுத்தாக்கல் செய்தனர். சசிகலா வரும் திங்கட்கிழமை ஆஜராகுமாறு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றத்தில் ஆஜராக வந்தால் தாம் கைது செய்யப்படலாம் என சசிகலா புஷ்பா அச்சமடைந்தால் இந்த உத்தரவுக்கு தடை கேட்டு சசிகலா புஷ்பா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 6 வாரத்திற்கு கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>