பாலியல் சர்ச்சையில் சிக்கிய டெல்லி அமைச்சர் பதவி நீக்கம்

இந்திய தலைநகர் டெல்லியின் அமைச்சர் ஒருவரின் பாலியல் காணொளி அடங்கிய குறுந்தகடு ஒன்று வெளியானதையடுத்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

sandeepkumar

சர்ச்சையில் சிக்கிய சந்தீப் குமார்
சந்தீப் குமார், ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மி கட்சியின் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சிதுறை அமைச்சராக இருந்தார்.
முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், குமாரின் ஆட்சேபணைக்குரிய வீடியோ உள்ள குறுந்தகடு ஒன்று தனக்கு கிடைத்ததாகவும், அதனால் அவரை பதவியிலிருந்து நீக்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
டெல்லியின் துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியா, முதலமைச்சர் கெஜ்ரிவாலின் கைகளில் இந்த வீடியோ கிடைத்த முப்பது நிமிடங்களில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டர் என நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவை முதலமைச்சருக்கு அனுப்பியது யார் என்று தெரியவில்லை. வியாழன் மாலையில் இது குறித்த தனது முடிவை டிவிட்டரில் வெளியிட்டிருந்தார் கெஜிரிவால்.
தங்களது கட்சி ஊழலையும், அவதூறுகளையும் ஒரு போதும் சகித்துக் கொள்ளாது என சிசோடியா தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் ஊழலில் ஈடுபவது கண்டுப்பிடிக்கப்பட்டால் அவர்கள் உடனடியாக நீக்கப்படுவர் என்றும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எண்டிடிவி செய்தி சேனலில் தெரிவித்திருந்தார்
குற்றம் சுமத்தப்பட்ட குமார் இது குறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.
ஆம் ஆத்மி கட்சி பதவிக்கு வந்த பிப்ரவரி 2015 ஆம் ஆண்டிலிருந்து அதன் அமைச்சரவையில் நீக்கப்பட்ட இரண்டாவது அமைச்சர் இவர் ஆவார்.
கடந்த வருடம் லஞ்சம் கேட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட உணவுத் துறை அமைச்சர் அசிம் அகமத் கான் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
போலியான கல்லூரி சான்றிதழ் சமர்ப்பித்த குற்றச்சாட்டு தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ஜிதேந்தர் தோமர் அமைச்சரைவையிலிருந்து விலகினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>