பாலாற்றின் குறுக்கே புல்லூரில் உயர்த்திக் கட்டியுள்ள தடுப்பணையில் குதித்து விவசாயி தற்கொலை

பாலாற்றின் குறுக்கே புல்லூரில் உயர்த்திக் கட்டியுள்ள தடுப்பணையில் குதித்து விவசாயி தற்கொலை

பாலாற்றின் குறுக்கே புல்லூரில் உயர்த்திக் கட்டியுள்ள தடுப்பணையில் குதித்து விவசாயி தற்கொலை

 

வேலூர்: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள பாலாற்றின் குறுக்கே புல்லூரில் ஆந்திர அரசு 12 அடி வரை உயர்த்திக் கட்டிய தடுப்பணையில் குதித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழக விவசாயிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டாக கடைபிடித்து வரும் 1892ம் ஆண்டு நதிநீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தத்தை மீறும் வகையில், சமீபகாலமாக பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் விஷயத்தில் ஆந்திரா தீவிரம் காட்டி வருகிறது. ஆந்திர பகுதியில் பாலாறு கடந்து வரும் 33 கி.மீ. தூரத்தில் அதன் குறுக்கே ஏற்கனவே 22 தடுப்பணைகளை 5 அடி உயரத்தில் கட்டி வைத்திருந்ததை 20 அடிகள் வரை உயர்த்தி கட்டி வருகிறது. அடுத்தடுத்து தடுப்பணை: இதில், தமிழக-ஆந்திர எல்லையான வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ராமநாயக்கன்பேட்டை அருகே புல்லூர் உட்பட பல இடங்களில் தடுப்பணை கட்டும் பணிகள் முடிந்துள்ளன. இதுதவிர இருமாநில எல்லைகளில் பரவியுள்ள மலைகளில் இருந்து வழிந்தோடி வரும் காட்டாற்று வெள்ளத்தையும் தடுத்து நிறுத்தும் வகையில் மணல் தடுப்பணைகளை ஆந்திர அரசு கட்டி வருகிறது.

 

Daily_News_817638635636ம

 

 

இந்நிலையில்ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே புல்லூரில் உயர்த்திக் கட்டியுள்ள தடுப்பணையில் குதித்து தமிழக விவசாயி சீனு என்பவார் தற்கொலை செய்து கொண்டார். தடுப்பணையில் குதித்த சீனு ஆணை அருகே உள்ள பள்ளத்தூரை சேர்ந்தவராவார். தடுப்பணை உயரத்தை ஆந்திர அரசு உயர்த்தியதால் பள்ளத்தூருக்கு நீர் வரவில்லை. புல்லூர் அணை நிரம்பியும் தமது அணைக்கு நீர் வராததால் சீனு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நண்பர்கள் முன்னிலையில் அணையில் குதித்த சீனு உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பாலாற்றில் ஆந்திரா தடுப்பணை கட்டியதை தமிழக அரசு தடுக்கவில்லை என பாலாறு விவசாயிகள் சங்க தலைவர் வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டும் பள்ளத்தூர் கால்வாய்க்கு நீர் வரவில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தடுப்பணை உயர்த்தினால் பள்ளத்தூருக்கு நீர் வரும் என்றும் தவறான தகவலை ஆந்திர அதிகாரி கூறினார் என்று விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். தற்போது அணை நிரம்பிய பிறகும் தமது நிலத்திற்கு நீர் வராததால் விவசாயி சீனு தற்கொலை செய்து கொண்டார். பள்ளத்தூரை சேர்ந்த விவசாயி சீறு தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது என்று வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

தடுப்பணை கட்டாமல் இருந்திருந்தால் வாணியம்பாடி வரை நீர் வந்து சேர்ந்து 7 ஏரிகள் நிரம்பியிருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே 36 கிமீக்குள் 22 தடுப்பணைகளை கட்டியுள்ளது ஆந்திர மாநில அரசு என்றும் வெங்கடேசன் புகார் தெரிவித்துள்ளார். பாலாற்று நீரை நம்பி தமிழகத்தில் 3.5 லட்சம் ஏக்கர் பயிர் சாகுபடி நடைபெறுகிறது என்றும் விவசாயிகள் கூறினர். மேலும் ஆந்திர அரசு தடுப்பணைகளின் உயரத்தை மேம்படுத்த முடிவு செய்துள்ளது என்று பாலாறு விவசாயிகள் சங்க தலைவர் தகவல்கள் தெரிவித்துள்ளார்.
புல்லூரில் உள்ள தடுப்பணை உயரத்தை 5 அடியில் இருந்து 12 அடியாக உயர்த்த ஆந்திரா திட்டமிட்டுள்ளது. கடந்த இரு நாட்களாக பெய்த மழையால் புல்லூர் தடுப்பணை நிரம்பியது என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தடுப்பணை உயரத்தை அதிகரிக்காமல் இருந்து இருந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் வந்திருக்கும் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கனமழையின் போதே பாலாற்றில் வராத தண்ணீர் இனி வர வாய்ப்பில்லை என்றும் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டார விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

குறிப்பு:ஆந்திர அரசை கண்டித்து தமிழக அரசின் சார்பில் பாலாறு தடுப்பணை பிரச்னை தொடர்பாக சுப்ரீம்  கோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

 

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>