பாகிஸ்தான், சீனாவை பற்றி பேசும் மோடி குஜராத்தை பற்றி பேசுவதில்லை – ராகுல்

201712111755003661_Modi-talks-of-Pakistan-China-but-not-Gujarat-Rahul_SECVPF

குஜராத் சட்ட சபை தேர்தல் பிரச்சாரத்தில் பாகிஸ்தான், சீனாவை பற்றி பேசும் மோடி தன் சொந்த ஊரான குஜராத்தை பற்றி மட்டும் பேசவில்லை என ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.

பாகிஸ்தான், சீனாவை பற்றி பேசும் மோடி குஜராத்தை பற்றி பேசுவதில்லை – ராகுல் கிண்டல்
காந்திநகர்:

குஜராத் சட்டசபைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிரதமர் மோடி பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் பனஸ்கந்தா உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் பேசினார். அப்போது, அண்மையில் காங்கிரசில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட மணிசங்கர் அய்யர், பாகிஸ்தான் முன்னாள் அதிகாரிகளை சந்தித்து பேசியதாக கூறப்படுவது குறித்து, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார்.

இந்நிலையில், மோடியின் பேச்சுக்கு ராகுல் காந்தி பதிலடி அளித்துள்ளார். ‘மோடி தனது பிரச்சாரத்தின் போது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஜப்பான் மற்றும் சீனாவை பற்றி பேசுகிறார். தனது சொந்த ஊரான குஜராத்தின் வளர்ச்சி குறித்து பேசுவதில்லை. மேலும் காங்கிரஸ் கட்சியை குறை கூறுவதில் ஆர்வமாக உள்ளார்.

மோடி தயவு செய்து மூன்று நிமிடங்களாவது குஜராத்தின் எதிர்காலத்தை குறித்து பேச வேண்டும். மேலும், மோடி அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவுக்கு சொந்தமான நிறுவனத்தின் அபரிமிதமான வளர்ச்சி குறித்தும் பேச மறுக்கிறார்’ என ராகுல் பேசினார்.

குஜராத்தில் பிரச்சாரம் நாளை முடிவடையும் நிலையில், மோடி மற்றும் ராகுல் இருவரும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி பிரச்சாரம் செய்து வருகின்றனர். இரண்டாம் கட்ட தேர்தல் 14-ம் தேதி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை 18-ம் தேதி நடைபெறும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>