பாகிஸ்தானுடன் கூட்டு சேர்ந்த மன்மோகன் சிங்குடன் கைகுலுக்கிய பிரதமர் மோடி

201801060718237166_PM-Modi-Reaches-Out-To-Manmohan-Singh-With-A-Warm-Handshake_SECVPF

புதுடெல்லி,

குஜராத்தில் சமீபத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, பா.ஜனதாவை தோற்கடிக்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தானுடன் கூட்டு சேர்ந்திருப்பதாக குற்றம் சாட்டினார்.இதையொட்டி இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்திருந்த நிலையில், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை நடவடிக்கைகளில் பிரதமர் மோடியும், மன்மோகன் சிங்கும் நேற்று பங்கேற்றனர்.

நண்பகலில் சபை ஒத்திவைக்கப்பட்டதும், பிரதமர் மோடி நேராக எதிர்க்கட்சியினர் அமர்ந்திருந்த பகுதிக்கு சென்றார். அங்கு மன்மோகன் சிங்கிடம் அவர் முகமலர்ச்சியுடன் வணக்கம் தெரிவித்தார். இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கி கொண்டதுடன், சிறிது நேரம் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்தனர்பின்னர் அங்கிருந்த அவை துணைத்தலைவர் பி.ஜே.குரியன், காங்கிரஸ் தலைவர் கரண் சிங் ஆகியோருடனும் பிரதமர் மோடி கைகுலுக்கினார். எதிர்க்கட்சியினரின் இருக்கைக்கே சென்று மன்மோகன் சிங்கிடம் கைகுலுக்கிய பிரதமர் மோடியின் செயல் மற்ற உறுப்பினர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>