பாகிஸ்தானிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பிடிபட்டது

201712070546094092_55-kg-heroin-worth-Rs-5-crore-seized-from-IndoPak-border_SECVPF

அமிர்தசரஸ்:

பஞ்சாப் மாநிலத்தின் குர்தஸ்பூர் மாவட்டம், பாகிஸ்தான் நாட்டின் எல்லையை ஒட்டிய பகுதி. இந்த வழியாக பாகிஸ்தானில் விளையும் அபின், கஞ்சா, ஹெராயின் போன்ற போதைப் பொருட்களை கடத்தல்காரர்கள் கடத்தி வருவதாக எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். எல்லை வரை வந்த கடத்தல்காரர்கள் பாதுகாப்பு படையினரை கண்டதும் காரில் தப்பி செல்ல முயன்ற போது பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு கடத்தல்காரர் சுடப்பட்டான். இருப்பினும் அவனது கூட்டாளிகள் காயமடைந்தவனுடன் தப்பித்து பாகிஸ்தான் எல்லைக்குள் ஓடிவிட்டனர்.

பின்னர் சோதனை நடத்தியதில் 55 பார்சல்களில் கடத்திவரப்பட்ட போதைப்பொருளை எல்லைப்பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இரண்டு துப்பாக்கிகள் மற்றும் ஒரு பைப் வெடிகுண்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றை கைப்பற்றி சோதனை செய்தபோது அந்த போதைப்பொருள் ஹெராயின் என கண்டறியப்பட்டது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.5 கோடி இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>