பள்ளிப் புத்தகத்தில் பிந்தரன்வாலேவை தீவிரவாதி என்று குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு

201707301518304567_HC-seeks-publishers-response-on-reference-to-Bhindranwale_SECVPF

மும்பை

பஞ்சாபில் காலிஸ்தான் தனிநாடு கேட்டு போராடிய பிந்தரன்வாலேவை திவீரவாதி என்று குறிப்பிட்ட பள்ளிப் புத்தகத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

மும்பை உயர்நீதிமன்றத்தில் அம்ரித்பால்சிங் கால்சா என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில் வரலாற்று பாடநூலில் பிந்தரன்வாலேவை தீவிரவாதி என்று குறிப்பிட்டிருப்பதாகவும் அது விஷம் தோய்ந்தப் பிரச்சாரம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அக்குறிப்பிட்ட அத்தியாயத்தை நீக்கவும் பரிந்துரைத்துள்ளார். புத்தகத்தைப் பதிப்பித்துள்ள மாநில பாடநூல் கழகமான பால்பாரதி ஒன்பதாம் வகுப்பு வரலாற்றுப் பாடப்புத்தகத்தில் இவ்வாறான சொல்லைப் பயன்படுத்தியிருப்பதாகவும், இது சீக்கியர்களின் மனதைப் புண்படுத்துகின்ற செயல் என்றும் தெரிவித்தார். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரினார்.

நீதிமன்றம் வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. இது தொடர்பாக பால்பாரதி விளக்கம் தரவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாபில் தனிநாடு (காலிஸ்தான்) கேட்டுப் போராடிய பிந்தரன்வாலேவை ‘போராளி’ அல்லது ‘கலக்காரர்’ என்றே குறிப்பிடுவது வழக்கமாக இருந்துள்ளது. 1984 ஆம் ஆண்டு சீக்கிய பொற்கோவில் வளாகத்தில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பிந்தரன்வாலே கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>