பலம் பொருந்திய அரசியல் கட்சிகள் இருப்பது அரசியல் கோமளித்தனமா? ஏமாளித்தனமா?:பேராசிரியர் மு.நாகநாதன்

நான் உணர்ந்த வகையில், மொரார்ஜி தியாகி, நேர்மையானவர். ஆனால் இந்திரா காந்தி போன்று எல்லா மாநில மக்களின் உணர்வுகளை மதித்துச் செல்வாரா என்ற அச்சம் இருந்தது. பொதுவாக குஜராத்தியர் சார்பாக மொரார்ஜி நடந்துகொள்வார்.

நான் உணர்ந்த வகையில், மொரார்ஜி தியாகி, நேர்மையானவர். ஆனால் இந்திரா காந்தி போன்று எல்லா மாநில மக்களின் உணர்வுகளை மதித்துச் செல்வாரா என்ற அச்சம் இருந்தது. பொதுவாக குஜராத்தியர் சார்பாக மொரார்ஜி நடந்துகொள்வார்.

1975 ஆம் ஆண்டு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு, அடிப்படை உரிமைகள் அடியோடு பறிக்கப்பட்டிருந்தன. எனது மாமனார் க. ரா. ஜமத்கினியும், பெருந்தலைவர் காமராசரும் விடுதலைப் போரட்டக்களத்தில் சிறையில் சில ஆண்டுகள் ஒன்றாக இருந்தவர்கள்.

உடல் நலமும், உளமும் பாதிக்கப்பட்டிருத்த காமராசரை எனது திருமணம் முடிந்து சில நாட்களில் எனது மாமனாருடன் நானும் எனது துணைவியாரும்  சென்றுப் பார்த்தோம்.

வாழ்வினணயரையும் , என்னையும்  பெருந்தகைமையோடு பெருந்தலைவர் வாழ்த்திய பாங்கு எங்கள் நெஞ்சில் இன்றும் நிலைத்திருக்கிறது.

திரு. ஜமத்கினி பெருந்தலைவரிடம், நீங்கள்  இந்திராவுக்குப் பதிலாக, மொரார்ஜி தேசாயை பிரதமராக தேர்ந்தெடுத்து இருந்தால், நெருக்கடி நிலை வந்திருக்காது அல்லவா ? என்று வினவினார். 

 அதற்குப் பெருந்தலைவர் அளித்த விடை, அவரின் நுட்பமான அரசியல் பட்டறிவை  எடுத்து இயம்பியது.

நான் உணர்ந்த வகையில், மொரார்ஜி தியாகி, நேர்மையானவர். ஆனால் இந்திரா காந்தி போன்று எல்லா மாநில மக்களின் உணர்வுகளை மதித்துச் செல்வாரா என்ற அச்சம் இருந்தது. பொதுவாக குஜராத்தியர் சார்பாக மொரார்ஜி நடந்துகொள்வார். ஒரு வேளை பிரதமராக மொரார்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் கூட இரண்டு ஆண்டுகள் பதவியில் இருந்திருக்கமாட்டார் என்று விடை அளித்தார் காமராசர். அவர்  கணித்தது போன்றே 1977 இல் பிரதமராகப் பதவி ஏற்ற மொரார்ஜி, 1979 இல் விலகினார்.

அந்த இரண்டு ஆண்டுகளில்- இந்திய மைய வங்கியின் ஆளுநராக எச். எம். படேல் என்பவரையும், நிதிக்குழுவின் தலைவராக நீதிபதி சிலாட் என முதன்மையான பொறுப்புகளில் குஜாராத்திகளின் ஆட்சிதான் கோலோச்சியது.

உகாந்தாவில் , இடிஅமீன் ஏழை மக்களை குஜராத்தி வணிகர்கள் சுரண்டுகிறார்கள் என்று கூறி நாட்டைவிட்டு வெளியேற்றியபோது, உடனடியாக நடுவண் அரசு விமானங்களை அனுப்பி, அவ்வணிகர்களை இந்தியாவிற்கு அழைத்து வந்தார் மொரார்ஜி. ஆனால் தற்போது மோடி கடைபிடிக்கும் அரசியல் அணுகுமுறை ஆபத்தில் முடியலாம்.

அம்பானிக் குழுமம்  கோதவரி ஆற்றுபடுகையில் ஓன். ஜி. சி . யின் கிணறுகளிலிருந்து பல ஆயிரம்  கோடி ரூபாய் எரிவாயுவைத் திருடியது உறுதி செய்யப்பட்டப் பிறகும் இன்று வரை எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ஓலிம்பிக் குழுவில் அம்பானியின் மனைவியை இடம் பெறச்செய்ததே  மோடி கொடுத்த உச்சபட்ச தண்டனை

அம்பானிக் குழுமம்  கோதவரி ஆற்றுபடுகையில் ஓன். ஜி. சி . யின் கிணறுகளிலிருந்து பல ஆயிரம்  கோடி ரூபாய் எரிவாயுவைத் திருடியது உறுதி செய்யப்பட்டப் பிறகும் இன்று வரை எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ஓலிம்பிக் குழுவில் அம்பானியின் மனைவியை இடம் பெறச்செய்ததே  மோடி கொடுத்த உச்சபட்ச தண்டனை

2014 இல்  மோடி பிரதமர் பதவி ஏற்றவுடன், அவசர அவசரமாக, ராஜ்நாத் சிங் பாஜக தலைவர் பதவியிலிருந்து இறக்கிவிட்டு, அமீத்ஷாவைத் தலைவராக நியமனம் செய்தது குஜராத்தியத்தியம் எப்படிச் செயல்படும் என்பதற்கான முதல் அடையாளம்.  உள்கட்சி ஜனநாயகம் பற்றி உரக்கப் பேசும் பஜக குழுமம் மோடியிடம் அடங்கி ஒடுங்கி போனது.

அம்பானிக் குழுமம்  கோதவரி ஆற்றுபடுகையில் ஓன். ஜி. சி . யின் கிணறுகளிலிருந்து பல ஆயிரம்  கோடி ரூபாய் எரிவாயுவைத் திருடியது உறுதி செய்யப்பட்டப் பிறகும் இன்று வரை எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

ஓலிம்பிக் குழுவில் அம்பானியின் மனைவியை இடம் பெறச்செய்ததே  மோடி கொடுத்த உச்சபட்ச தண்டனை என்று பாஜக அடிப்பொடிகள் வாதிடக்கூடும்.

தகுதி வாய்ந்த நம்ம ஊர் ரகுராம் ராஜனை இந்திய மைய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து நீக்குவதற்கு, திட்டமிட்டு சதிச் செய்து , சாமியைச் சாமி ஆடச்செய்து, ஒரு குஜராத்தி படேலை ஆளுநராக ஆக்கியது குஜராத்தியத்தின் மிக மோசமான
முன் உதாரணம்.

பெருந்தலைவர் காமராசர்- “புதுடெல்லியின் அதிகாரக் குவிப்பு, தனிமனித சர்வாதிகாரமாக உருவெடுத்து, நெருக்கடியாக மாறியது.” என்றார். 

மாநிலங்களுக்குப் போதிய அதிகாரங்களை அளித்தால்தான் சர்வாதிகார முறையைத் தடுக்க முடியும் என்றார். பெருந்தலைவர் கணித்ததுப் போன்று குஜராத்தியின் குறுங்குழு அரசியல்வாதமும், அரசியல் நிகழ்வுகளும் நடைபெறகின்றன.

போலி தேசியம் பேசி, மற்ற தேசிய இனங்களின் இன, மொழி, பண்பாட்டு அடையாளங்களை, உரிமைகளை அழித்து, ஓற்றையாட்சி முறையை குஜராத்தியம் வழியாகக் கொண்டு வருவதற்குத் துடியாய் துடிக்கின்றனரோ என்ற ஐயம் வலிமைப் பெறுகிறது.

இன்று குஜராத்தியினரிடம்தான், பணமும் , அரசியல் அதிகாரமும் ஒரு சேர குவிந்து காணப்படுகிறது. இந்த அடிப்படையை. உணராமல்  பலம் பொருந்திய அரசியல் கட்சிகள் இருப்பது அரசியல் கோமளித்தனமா ஏமாளித்தனமா?

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>