பரிதிஇளம்வழுதிக்கு தலைவர்கள் புகழாரம்

பரிதிஇளம்வழுதிக்கு தலைவர்கள் புகழாரம்

பரிதி இளம் வழுதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி:

பரிதியின் மறைவு மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுக இளைஞரணியின் ஆரம்பகாலத்தில் இருந்து, இளைஞரணியின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் பரிதி இளம் வழுதி. அவர் திமுகவில் இருந்தபோது என்னுடன் நெருங்கிப்பழகியவர். மேலும் என்னுடன் பலமுறை சிறை வந்தவர் பரிதி.
WhatsApp Image 2018-10-13 at 10.11.39 AM
தன்னந்தனியாக சட்டமன்றத்தில் ஆளும்கட்சியை எதிர்த்து குரல் கொடுத்தவர். துணை சபாநாயகராக, செய்தித்துறை அமைச்சராகமற்றும் 6 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து அவர் சிறப்பாக பணியாற்றினார்.

கலைஞர் கருணாநிதியால் இந்திரஜித் என்றும், வீர அபிமன்யு என்றும் பாராட்டப்பட்டவர். அவர் கட்சி மாறினாலும், கருணாநிதி பரிதியின் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தார்.

பரிதி இளம் வழுதியின் மறைவால் வேதனையையும், அதிர்ச்சியும் அடைந்தோம். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கு திமுக சார்பில் ஆழந்த இரங்கல்

டி.டி.வி. தினகரன்

கழகத்தின் அமைப்பு செயலாளர் மறைந்தது அதிர்ச்சியையும் கஷ்டத்தையும் அளிக்கிறது…

பலமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், 2013 ஆம் ஆண்டு ஜெ.முன்னிலையில் சேர்ந்தார்..

உடல் நலம் கூட பாராமல் அயராது உழைப்பவர் …

அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்..

இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் செ.கு.தமிழரசன்

தமிழக அரசியலில் மிக குறைந்த வயதில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றவர். அவரது மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. திமுக வளர்ச்சி அடைய முக்கிய பங்காற்றியவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மிகப் பெரிய அளவில் பங்காற்றியவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

விசிக தலைவர் திருமாவளன்

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பால் காலமனார். இவரது மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. பேரறிஞர் அண்ணா அவர்களால் நியமிக்கப்பட்டவர். திமுகவின் கோட்டையாக சென்னை இருந்ததிற்கு இவரது தந்தை காரணமாக இருந்தவர்.

6 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். கலைஞரிடம் நல்ல பெயர் பெற்றவர் பரிதி இளம்வழுதி.

மிகச்சிறந்த பேச்சாளர். எதிரிகளும் இவரது பேச்சை இரசிக்க கூடிய அளவிற்கு பேச்சாற்றல் உடையவர்.

இவரது மறைவு வருத்தம் அளிக்கிறது. தமிழக அரசியலில் இவரது இழப்பு பேரிழப்பு . அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
ஒரு மனிதன் தான் கொண்டுள்ள கொள்கையில் எப்படி உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்தாக்கட்டக விளங்கியவர்.

தனது லட்சியத்திற்காக இறுதிவரை போராடியவர்
அவரது மறைவு அடித்தட்டு மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.அவரை இழந்த வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
அண்ணா அவர்கள் உருவாக்கிய இயக்கத்தை கட்டிக்காத்த முன்னணி தலைவர்களில் ஒருவர்.

நொடி நேரத்தில் கேள்விக்கு எதிர் கேள்வி கேட்பதும், அமைச்சர்களை திணரடிப்பதிலும் திறன் படைத்தவர்.

திராவிட இயக்கம் தமிழகத்தில் வலுவாக களம் காண வேண்டிய நேரத்தில் பரிதியின் மறைவு ஈடுசெய்ய முடியாதது.

டி.கே.எஸ்.இளங்கோவன்
மிக இளைய வயதில் தன்னுடைய போராட்ட குணத்தால், அரசியலில் ஆழமான முத்திரை பதித்தவர்.

திமுக சென்னை மாவட்ட செயலாளராக பணியாற்றியவர். கருணாநிதியால் மிகவும் பாராட்டப்பட்டவர்.

அவர் நம்மை விட்டு மறைந்தது வருத்தமளிக்கிறது. 6 முறை சட்டமன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றிவர். அவர் இழப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது.

அஞ்சலி செலுத்திய பின் கி.வீரமணி பேட்டி
முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி சிறந்த சுயமாரியாதை கொண்டவர்.
மிகப்பெரிய திராவிட இயக்கத்தின் சிறிய செயல் வீரரின் ஒருவாராக விளங்கியவர்.
தந்தை பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கையை கொண்டவர். அவர் அரசியலில் பல்வேறு நிலைபாடு எடுத்தாலும், திராவிடத்தின் நிலை மாறாதவர்.

இவரது இழப்பு திராவிட இயக்கத்திற்கு பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கு திராவிடர் கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கல்.

அஞ்சலி செலுத்திய பின் சரத்குமார் பேட்டி:

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி நல்ல நண்பர், பிறருக்கு உதவி செய்யும் பணப்பான்மை கொண்டவர்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>