பயிர் கருகியதால் விவசாயி தற்கொலை

farmersucide jakkamma news

நீடாமங்கலம் : திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகா ஆதனூர் ஊராட்சி பெரியகோட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் ெநடுஞ்செழியன் (35). விவசாயி. இவர் சில மாதங்களுக்கு முன் அதே பகுதியில் உள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து ஆழ்துளை கிணற்று நீரை பயன்படுத்தி உளுந்து, தண்டுக்கீரை மற்றும் நெல் சாகுபடி செய்திருந்தார்.

ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வறண்டது. இதனால் சில வாரங்களுக்கு முன் உளுந்து கருகியது. மீதமிருந்த நெல், தண்டுக்கீரையும் கருகி வருகிறது. இது, அவருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியது. இந்தநிலையில், நேற்றுமுன்தினம் மாலை வயலுக்கு சென்ற நெடுஞ்செழியன் கருகிய பயிர்களை பார்த்து கலங்கியபடி அங்கேயே விஷம் குடித்துள்ளார். மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்ட அவர் இறந்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>