பதவி பேராசையால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மோடி அரசு கவிழ்க்கிறது நாந்தெட் பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி

‘‘பதவி பேராசையால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மோடி அரசு கவிழ்க்கிறது’’ என்று நாந்தெட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

பதவி பேராசை
மராட்டிய மாநிலம் நாந்தெட் மாவட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவரும் ஆன சங்கர்ராவ் சவானின் சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து, அங்கு கூடியிருந்த திரளான தொண்டர்கள் மத்தியில் சோனியா காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

தற்போதைய அரசு பதவி பேராசையால், அருணாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் முற்றிலும் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்து, மக்களின் ஆணையை அவமதித்துவிட்டது. இருந்தாலும், நமது அரசியல் அமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயகத்தை காக்கும் சுப்ரீம் கோர்ட்டை எண்ணி நாம் பெருமை அடைகிறோம்.

விவசாயிகள் அன்னியப்பட்டு விட்டனர்
விவசாயிகள், பழங்குடியின மக்கள், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் ஆகியோரின் நலன் கருதி முந்தைய பிரதமர் மன்மோகன் சிங் அரசில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்கள் அனைத்தையும் இந்த அரசு நீர்த்து போக செய்துவிட்டது. பலவீனப்படுத்தி விட்டது. முடிவில், லட்சக்கணக்கான விவசாயிகள் சுமையை தாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

உங்களது (மோடி அரசு) கொள்கைகளால் விவசாயிகள் அன்னியப்பட்டு விட்டனர். முதலாளித்துவ வர்க்கத்தினரின் கோடிக்கணக்கான ரூபாய் கடனை நீங்கள் தள்ளுபடி செய்துவிட்டீர்கள். ஆனால், விவசாயிகளை விதிப்படி விட்டுவிட்டீர்கள். விவசாயிகளின் குரல் நசுக்கப்படுவதை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது.

இவ்வாறு சோனியா காந்தி கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>