பணவீக்கம் குறைந்துள்ளதாகக் கூறுபவர்கள் அதனை நிரூபிக்க முடியுமா?: ரகுராம் ராஜன்

பணவீக்கம் குறைந்துள்ளதாகக் கூறுபவர்கள் அதனை நிரூபிக்க முடியுமா?: ரகுராம் ராஜன்

தொடர்ச்சியாக இரண்டு முறை ஏற்பட்ட வறட்சி, சர்வதேச பொருளாதார மந்த நிலை, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறியது போன்ற சூழல்களில் இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் ஏராளமான சிக்கல்கள் ஏற்பட்டன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.இருப்பினும், இந்தியப் பொருளாதாரம் தற்போது குறிப்பிடத்தக்க அளவில் நிலையானதாகவே உள்ளது.

பணவீக்கம் குறைந்துள்ளதாகக் கூறுபவர்கள் அதனை நிரூபிக்க முடியுமா? என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் சவால் விடுத்துள்ளார்.

பணவீக்கம் குறைந்துள்ள போதிலும் வட்டி வகிதங்களைக் குறைக்க ரகுராம் ராஜன் நடவடிக்கை எடுக்கவில்லை என சிலர் விமர்சித்து வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ரகுராம் ராஜனின் நிதிக் கொள்கை சரியில்லை என பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட பலர் விமர்சித்து வந்தனர். குறிப்பாக, வட்டி விகிதங்களை அவர் குறைக்காததால் வளர்ச்சி தடைபட்டுவிட்டதாக புகார் கூறப்பட்டது.

இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்களிடம் ரகுராம் ராஜன் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

ஒவ்வொரு கிராமத்திலும் வங்கிக் கிளைகளை அமைக்கும் திட்டம் சாத்தியமற்றது. ஏனெனில், அதற்கு செலவு அதிகம். ஆனால், நடமாடும் வங்கிகள் மற்றும் சிறு கிளைகளை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ரிசர்வ் வங்கி ஆய்வு செய்து வருகிறது.

நுகர்வோர் விலைக் குறையீடு தொடர்ந்து நான்காவது மாதமாக அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 5.77-ஆக இருந்த அந்தக் குறியீடு தற்போது 5.8-ஆக அதிகரித்துள்ளது.

வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என்று சொல்பவர்கள் பணவீக்கம் குறைந்துள்ளதா? என்பதை நிரூபிக்க வேண்டும்.

தொடர்ச்சியாக இரண்டு முறை ஏற்பட்ட வறட்சி, சர்வதேச பொருளாதார மந்த நிலை, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறியது போன்ற சூழல்களில் இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் ஏராளமான சிக்கல்கள் ஏற்பட்டன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.இருப்பினும், இந்தியப் பொருளாதாரம் தற்போது குறிப்பிடத்தக்க அளவில் நிலையானதாகவே உள்ளது.

பருவமழை போதிய அளவில் பெய்வது, பொருளாதார கட்டமைப்பில் சீர்திருத்த நடவடிக்கைகள், குறுந்தொழில் சார்ந்த பொருளாதாரத்தின் நிலைத்தன்மை ஆகியவற்றைப் பொருத்தே வளர்ச்சியை வேகப்படுத்த முடியும் என்றார் அவர்.

தன் மீதான விமர்சனங்கள் அதிகரித்த நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவிநீட்டிப்பு பெற விரும்பவில்லை என்றும், செப்டம்பர் 4-ஆம் தேதி பதவிக்காலம் முடிவடைந்தவுடன் பேராசிரியர் பணிக்குத் திரும்பவுள்ளதாகவும் ராஜன் கூறியிருந்தார்.

இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவி வகிப்பது தொடர்பான தமது அனுபவங்களை விவரித்து புத்தகம் எழுதும் எண்ணமில்லை என்று கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>