பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு நீக்கம்: பொருளாதாரத்துறை செயலாளர் சக்திகாந்த் தாஸ் தகவல்

2016-14-11-12-55-51m

டெல்லி: ஒரு நாளைக்கு 10 ஆயிரம் மட்டுமே எடுக்கமுடியும் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதாக பொருளாதாரத்துறை செயலாளர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பொருளாதாரத்துறை செயலாளர் சக்திகாந்த் தாஸ், கடந்த சில நாட்களில் ரூ.3 லட்சம் கோடி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் மூலம் ரூ.50 ஆயிரம் கோடி விநியோகிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஏ.டி.எம்.களில் கூடுதல் பணம் வழங்கப்படும் என்றார்.

வங்கிகளில் ஒருவாரத்தில் ரூ.24 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம் என்றும், நாள் ஒன்றுக்கு ஏ.டி.எம். மையங்களில் ரூ.2500 வரை பணம் எடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். தபால் நிலையங்களில் கூடுதல் பணம், விநியோகம் செய்யப்பட உள்ளதாகவும் சக்தி காந்த் தாஸ் தெரிவித்துள்ளார்.

ஏ.டி.எம்.களில் 2000 ரூபாய் நோட்டுகள் நாளை முதல் கிடைக்கும் என்று தெரிவித்த அவர், வங்கிகளில் இருந்து ரூ.24 ஆயிரம் வரை எடுக்காலாம் என்றார். நடப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் வாரம் ரூ.50 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பெட்ரோல் நிலையங்கள், மருத்துவமனைகளில் பழைய 500,1000 ரூபாயை நவம்பர் 24ம் தேதி வரை கொடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுத் துறைகளுக்கு இ-மெயில் மூலம் பணம் பரிவர்த்தனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கான கட்டணத்தை வங்கிகள் வசூலிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>