பணமதிப்பிழப்பு பலனை குஜராத் தேர்தலில் பாஜக அனுபவிக்கும்: அகிலேஷ்

Tamil_News_large_1915635

லக்னோ: பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கையின் பலன் என்னவென்பதை பாஜகக்கு குஜராத் தேர்தலின் முடிவுகள் தெரிவிக்கும் என சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதே மாநிலத்தில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த வணிகர்கள் மாநாட்டில் அகிலேஷ் யாதவ் பங்கேற்று பேசுகையில், பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் நாட்டின் மொத்த தொழில் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.

மேலும் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் எதிராகச் செயல்பட்டு வரும் மத்தியில் ஆளும் பாஜக அரசு, இதற்கான பலனை குஜராத் தேர்தலின் முடிவுகள் முடிவில் அனுபவிக்கும் என்று கூறினார். பாஜகவினர் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் எதிராகச் செயல்பட்டு வருவதாகவும் அப்போது அவர் குற்றம்சாட்டினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>