படவிமர்சனம் துமிலன்

 

Naradhar-1948-018

படவிமர்சனம்                                                                                        துமிலன்

Blue Colour திரைப்படத்தை பற்றி முதன் முதல் எழுதப்பட்ட விமர்சனம் பத்திரிக்கை உலகத்திற்கு புதுமையாக இருந்தது.

பிறகு வளரும் படத்தொழிலை மக்கள் அறிய செய்வதற்கு அத்தியவசியமான ஓர் அம்சமாக இருந்து வந்தது. சென்ற சில வருஷங்களாக அது பத்திரிக்கைகார கள், வாசகர்கள், படத்தொழிலிட்டார் கள் எல்லோருக்குமே ஒரு தீராத, தப்ப முடியாத, தலைவலியாக இருந்தது.வந்துக்கொண்டிருக்கிறது.

 

Naradhar-1948-21ககல ஆமாம், திரைப்பட விமர் சனம் செய்ய வேண்டியது அவசியம் தானா? ஆம். ஆவசியம் தான் அது ஒரு கலை.

 

ஆகையனாலே அது விமர்சனம் செய்யப்படுவதற்குரியது.   தவிர அதை தினமும் பல லட்சக்கனக்கான மக்கள் பணம் கொடுத்து பார்த்து வருகிறா கள். ஆகையால் பொது ஜன நம்மையை முன்னிட்டு அதைப்பற்றி எங்களுடைய அபிப்பிராயங்களை எழுதும் பொறுப்பை ஆண்டவன் எங்கள் தலை மீது சுமத்தி இருக்கிறார் என்று பத்திரிக்கைகாரர் கள் எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.

 

இப்படி அதிக பிரசங்கித் தனமாக எண்ணி வந்த குற்றவாளிகளுள் நானும் ஒருவன் என்பதை ஒப்புக் கொண்டு விடுகிறேன், என் பெயரிலும், பெயர் போடாமலும் எத்தனையே படங்களைப்பற்றி அபிப்பராயங்கள் எழுதி இருக்கிறேன்.

ஆனால், அப்போதெல்லாம் என்னுள் ஒரு சந்தேகம் இருந்துக்கொண்டே தான் இருந்தது.

 

படத்தை ஒரு கலையாக கருத வேண்டியது தானா? என்று.   பரதநாட்டியம், சங்கிதம் இவற்றைப் போல் திரைப்படம் ஒரு நாடகக் கலையல்ல. இதை ஒரு சினிமா தேவையதோ அல்லது திரைப்பட மாமுனிமோ அருளியிருக்கவில்லை. விம ச்சனம், அணுகுண்டு,காப்பி, சாக்கலேட், முகஷவரம் செய்து கொள்ளும் பழக்கம் எல்லாம் வேத லேகத்திலேயே இருந்தது என்று சொல்பவர்கள் கூட திரைப்படம் முன்னமே இருந்தது என்று சொல்ல முன் வருவது இல்லை.

 

திரைப்படம், அப்பட்டமான புதுக்கலை. அந்த கலைக்கு இன்னின்ன லட்சனங்கள் இருக்க வேண்டும் என்று யாரும் வகுத்து கொடுத்திருக்கவில்லை. பரதநாட்டியத்தையும், சங்கிதத்ததையும் விமர்ச்சனம் செய்யும் போது வேங்கடமகி, தியாகப்பிரம்மம் முதலியவ களை சாட்சிகளாக குறிப்பிடுகிறோம்.   7

 

ஆனால் திரைப்படத்தைப் பற்றி எழுதும் போது இ வின் தால் பெக், சிரெட்டா சாலா, ருடாலப் வாலெண்டினெ, சார்ளி சாப்ளின் இவர்களை துணைக்கு கூப்பிட்டுக் கொண்டிருப்பதில்லை.   படத்தை கர்நாடக சுத்தமாக பிடிப்பததென்றால், இன்று நடிக கள் முகத்தில் அரிதாரம் பூசிக் கொள்ள வேண்டும்.

 

படப்பிடிப்பின் போது நல்ல வெளிச்ச மேற்படுவதற்காக, சூரிய வெளிச்சம் துத்தநாதக் தகட்டில் பட்டு பிரதிகலிக்கும் படி செய்துக்கொண்டிருக்க வேண்டும்.   நடிகர்களுக்குப் பெரிய ஆபத்து என்னவென்றால் அவர்கள், ஆண்டவன் தங்களுக்கு அளித்திருக்கும் தொண்டையே உபயோகித்தே பாடித் தொலைத்தாக வேண்டிய சிரமம் ஏற்பட்டுவிடும், ஏனென்றால் கூலிக்கு குரல் கொடுப்பதென்பதோ, பெறுவதென்பதோ அப்பொதெல்லாம் கிடையாது.

 

திரைப்படக்கலை நாளுக்கு நாள் அபிவிருத்தியடைந்து வந்துக்கொண்டிருக்கிறது. கடைசியாக ஸக்கராமா பார்த்தோம். இன்று சில வருடங்களில் படம் பார் போர்களே காட்சிகளில் நேரடயாக் கலந்துக்கொள்வது போன்ற பிரம்மை உண்டாக்கச் செய்யும் ‘டைரக்டராம” உத்தி கண்டுபிடிக்கப்பட்டால் அதைப்பற்றி நாம் ஆச்சிரியப்படுவதற்கில்லை.

 

சங்கீத வித்வானும், நடனமாடும் பெண்ணும், தனிப்பட்ட முறையில் சோபிக்க முடியும்.       பக்கவாத்தியங்கள் நன்றாக அமையாவிட்டாலும், நட்டுவாங்கம் சரியில்லாவிட்டாலுங்கூட திறமசாலியான கலைஞ கள் சமாளித்து கொண்டு விடுவா கள்.

 

ஆனால், திரைப்படத்தில் அப்படி முடியாது.   பக்கவாத்தியங்களின் ஸ்தானத்தில் பக்க சாதனங்கள் இருந்தே வருகின்றன. காட்சி ஜோடனை, ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, சக நடிகர்களின் நடிப்பு, கதை, சம்பாஷனை முதலியவை, சொல்ப்போனால் திரைப்படத்தில் பக்க சானங்கள் தான் முக்கியமானவை. இதையெல்லாம் கவனிக்கும் போது திரைப்படத்தை மதிப்பிடுவதற்கு தனியான ஒரு அளவகோல் அவசியமாகிறது.

 

Naradhar-1948-21க     அதிலும் இந்த அளவுகோல் தேசத்திற்கு தேசம் வித்தியாசப்படுகிறது.

 

ஹாலிவுட்டில் ‘அக்கடமி அவார்டு” பெறும் சில படங்களின் தரத்தைப்பற்றி நமக்கு ஒன்றும் பரிவதில்லை. நமது நாட்டிலோ தேர்தலில் தோற்பவர்கள் மேல் சபைக்கு தேர் தெடுக்கப்படுவது போல பொது ஜன ஆதரவு பெறதா படங்களே அநேகமாக ராஷ்டிரபதியின் பரிசுக்கு லாயக்கானவயாகத் தெரிந்தெடுக்கப்படுகின்றன.

 

தமிழ் படங்களைப் பற்றி விமர்ச்சன அளவுக்கோல் அடி அங்குலம், சென்டி மீட்ட , மில்லி மீட்ட முதலிய பிரிவுகள் உள்ளதாகயிக்க வேண்டியதில்லை. முழம், சாண், சம்பா இப்படி வைத்துக் கொண்டு, அதை குத்து மதிப்பாக கணிக்கிட்டால் போதும். நாம் கைப் புத்தங்களை விமர்சனம் செய்யும் முறையில் தான் படக்கதையையும் பற்றி விவரமாக விமர்சனம் செய்கிறோம்.

 

Naradhar-1948-136 பெரும்பாலனவர்களின் நடிப்பு, சம்பாஷனை முதலியவை கண்டிபான விம சனத்திற்கு தாக்குப்பிடித்து நிற்காது. ஆகையால் அவற்றைப் பற்றிய பழைய கண்ணறவி பல்லவியை விபரமாக எழுதிக்ககொண்டிருக்க விரும்பவில்லை.

 

நான் முக்கியமாக எடுத்துக் கூற விரும்புவது திரைப்பட பிடிப்பை ‘கலை கலை” என்று கூறி நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு வருவதைப் பற்றி தான், அதை ஒரு கலையாக செய்ய முடியும்.

 

அதை அப்படி செய்ய துனிபவ கள் சில இல்லாமல் இல்லை. ஆனால், பொதுவாக படம் பிடிப்பவ கள், அது தப்பித்தவறி உய ந்த படமாக அமைந்து விட்டால் என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருப்பார்கள்! ஏனெனில், திரைப்படத்தின் அடிப்படையான கலையம்சம் வேறு. பட விம சனம் செய்பவ கள் இன்னும் நான்கு ஜன்மங்களுக்கு பிறகுப் சொந்தத்தில் ஒரு படம் பிடிக்கக் கூடும். எதி பாராத விதமாக இந்த பிறவியிலேயே ஒரு படம் எடுக்கக்கூடிய பண வசதி ஏற்ப்பட்டு வருகிறதுஎன்று வைத்துக்கொள்ளுங்கள்.

 

அவ கட்டாயம் கலை, கலை என்று பிதற்றிக் கொண்டிருக்கமாட்டா . எப்படி அதிகமான ஜனங்களை பா க்க செய்வது நிறை பணம் சம்பாதிக் முடியும் என்பது தான் அவர்களது லட்சியமாக இருக்கும் என்று சத்தியம் செய்து கூறுவேன்.

 

ஆகவே இத்தொழிலைக் கொண்டு இத்துறையில் இறங்குபவர்கள், அதே பணலாப நோக்கம் உள்ளவர்களாக இருப்பது மிகவும் சகஜம். அந்த லட்யசிம் நிறைவேற என்ன செய்ய வேண்டுமே அத்தனையும் செய்து பார்ப்பார்கள். படம் பணமும் சம்பாதித்து கொடுத்துவிட்டு, ‘நல்லபடம்” என்று பெய எடுத்துவிட்டால் அதை அவர்கள் அதற்காக மன்னித்துவிட தயாராகிறார்கள்.

 

Naradhar-1948-1756

 

இந்த சூழ்நிலையில் முறையான விமர்சனத்து இடமே இல்லை. தலைப்புள்ள ஒரு பத்திரிக்கை பத்தியை நிரப்புவதற்காக ஏதோ பெயருக்கு எழுதிவரலாம் அவ்வளவு தான்.

 

பாவேந்தர்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>