பசுமை தீர்ப்பாயம் உத்தரவு : ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணி நிறுத்தம்

ஸ்ரீவைகுண்டம்: பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு எதிரொலியாக ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர் வாரும் பணி நிறுத்தப்பட்டது. இதன் மூலம் மணல் கொள்ளை தடுக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம்: பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு எதிரொலியாக ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர் வாரும் பணி நிறுத்தப்பட்டது. இதன் மூலம் மணல் கொள்ளை தடுக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம்: பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு எதிரொலியாக ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர் வாரும் பணி நிறுத்தப்பட்டது. இதன் மூலம் மணல் கொள்ளை தடுக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அணை தாமிரபரணி ஆற்றில் பசுமைத் தீர்ப்பாய உத்தரவின்படி 2015 ஜூலை முதல் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது.

அணை தூர்வாரும் பணி என்ற பெயரில் தாமிரபரணியில் மணல் கொள்ளை நடப்பதாக ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணியன் பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாய உறுப்பினர் நீதிபதி ஜோதிமணி, தொழில்நுட்ப உறுப்பினர் ராவ் ஆகியோர் தூர் வாரும் பணி எதுவும் செய்யக் கூடாது. இதுவரை நடந்த பணிகள் குறித்து அரசு தாக்கல் செய்ய வேண்டும்.

அதில் தூர் வாரிய போது எடுக்கப்பட்ட மணல் எவ்வளவு, எந்த விதிகளின்படி விற்பனை செய்யப்பட்டது என்ற விவரங்களை தெளிவாக அளிக்க உத்தரவிட்டனர். பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர் வாரும் பணி நிறுத்தப்பட்டது. இதன் மூலம் மணல் கொள்ளை தடுக்கப்பட்டுள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>