பங்குனி உத்திர திருவிழா சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு

images (14)

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடந்தோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடத்தப்படும். இந்த வருட பங்குனி உத்திர திருவிழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி ஆறாட்டுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை கடந்த மாதம் பழைய கொடிமரம் அப்புறப்படுத்தப்பட்டது. கொடிமரம் இல்லாததால் இவ்வருடம் பங்குனி உத்திர திருவிழாவை வரும் ஜூன் மாதத்திற்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டது.

ஆனால், ஏற்கனவே திருவிழாவுக்காக நடை திறக்கும் ேததி நிச்சயிக்கப்பட்டதால் அந்த நாளில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் அதே நாளில் கோயில் நடையை திறப்பது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி நாளை மாலை 5 மணியளவில் நடை திறக்கப்படும். 31ம் தேதி முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை தினமும் பூஜைகள் நடைபெறும். ஏப்ரல் 9ம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். சித்திரை விஷு தினத்திற்காக மறுநாள் மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். ஏப்ரல் 14ம் தேதி சித்திரை விஷு சிறப்பு பூஜைகள் நடைபெறும். விஷு கனி தரிசனமும் நடைபெறும். அதன்பின் ஏப்ரல் 18ம் தேதி இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>